Wednesday, July 13, 2011

இந்தியாவின் புதிய சூப்பர் கம்ப்யூட்டர்

உலகில் அதிவேகமான கணினிகளை உருவாக்குவதில் உலகில் முன்னணி நாடுகள் போட்டிப்போட்டு செய்துவருகின்றன. அதில் நம் இந்தியாவும் ஒன்று. இந்தியாவிலிருந்து இதுவரை 6 அதிவேக சூப்பர் கணினிகள் இயங்கிவரும் நிலையில் தமிழகத்திற்கு மகுடம் வைத்தார்ப்போன்று சென்னையில் உள்ள இன்ஸ்டியூட் ஆப் மேத்மெடிக்கல் சயின்ஸ் வளாக பிரிலியண்ட் வல்லுநர்கள் நாட்டின் ஏழாவது அதிக செயல்திறன் கொண்ட சூப்பர் கணினியான அன்னபூர்ணாவை வடிவமைத்துள்ளனர். .

1.5 டெரா பைட் மெமரி, 30 டெரா பைட் சேமிக்கும் திறன் கொண்ட இந்த அதிவேக சூப்பர் கணினி, இயற்பியல்,லாட்டிஸ் தியரி, கம்யூட்டனல் பையலாஜி போன்ற துறைகளில் ஆராய்ச்சி செய்ய பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர். இந்த அன்னப்பூர்ணா ரூ.6 கோடி செலவில் நாட்டின் ஆராய்ச்சித் துறைக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது.

சரி அன்னபூர்ணாவின் செயல்திறன் எப்படி என்று பார்ப்போமா?

1). 1024 கோர் - இண்டெல் நேகலெம் 2.93GHz சிப்ஸ்
(நமது கணினிகளில் நாம் பயன்படுத்துவது 1 கோர்(core) மட்டுமே நமது கணினிகளை விட 1024 மடங்கு வலிமையுடையது இந்த கணினி.)

2).1.5 டெரா பைட் மெமரி
நாம் இப்போது பயன்படுத்துவது 1 GB RAM . 1.5 TB=1500 GB RAM)

3)30 டெரா பைட் ஸ்டோர்ஜ் = 30 TB (1024 gb= 1 TB)

12 டெராபிளாப் வேகம் கொண்ட அன்னபூர்ணா நம் நாட்டின் மூன்றாவது மிக அதிக செயல்திறன் கொண்ட கணினியாக கருதப்படுகிறது.

இதே போன்று பெங்களூரில் உள்ள இண்டியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் ஒரு கணினியையும்,டாடா இன்ஸ்டியூட் ஒரு கணினியையும் முன்பு வடிவமைத்து உள்ளன.

அன்னபூர்ணா இண்டியன் இன்ஸ்டியூட்டின் நான்காவது அதிக செயல்திறன் கொண்ட கணினியாகும்.

ஏற்கனவே கப்ரு,விந்தியா,ஆரவள்ளி ஆகிய முதல் மூன்று கணினிகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன.

நாட்டின் 15 இன்ஸ்டியூட்களை இணைக்கும் பணியை செய்யும் கருடா கிரிட் நிறுவனத்திற்காக கப்ரு சூப்பர் கணினி செய்கிறது.


ஆனால் என்ன ஒரு விசயம்...

மின்சாரத்தை நிறைய சாப்பிடும் :)

சுட்டிக்கம்ப்யூட்டரை உருவாக்கிய நம்மூர் ஆட்களுக்கு வாழ்த்துக்கள்

1 comment:

  1. No Deposit Casinos | Claim Free Welcome Bonus Codes for
    No 해외 안전 놀이터 Deposit Casinos ➤ Sign 강원 랜드 칩 걸썰 Up Bonus Codes For Real Money ✓ xbet Take Advantage Of Free No Deposit 마추 자 사이트 Casino Bonuses ✓ Free 온라인 바카라 사이트 Spins For Real Money.

    ReplyDelete