Saturday, April 30, 2011

காதலென்பது


காதல்
கனவுகளின்
வேடந்தாங்கல்
கற்பனைகளின்
சரணாலயம்.

காதல்
ஆழம் தெரியாமல்
காலைவிட்டால்,
உள்ளிழுத்து
உயிரை உறிஞ்சிவிட்டு
உடலை மட்டும்
வெளியேற்றிவிடும்
கடல்

காதல்
நினைவுகளை
நிஜமென்றெ நம்பி
நித்திரையை
தொலைத்துவிடும்
கனவு

காதல்
கல்விகற்க
செல்லும்போது
கலவிகற்க
கற்றுக்கொடுக்கும்
பாடம்

காதல்
எறியுமென்று தெரிந்தும்
நெஞ்சுக்குள்
கொழுத்திக்கொள்ளும்
நெருப்பு.

காதல்
மட்டும்தான் வாழ்க்கையென
நினைத்து வசந்தத்தை
தொலைத்து நிற்கும்
இலையுதிற்காலம்.

காதல்
என்ற சொல்லை நம்பி
கன்னியர் மட்டுமல்ல
காளைகளும் கதிகலங்கித்தவிக்கும்
கலிகாலம்.

காதல்
ஆள்களைத்தொட்டால்
கேளிக்கை
அதுவே!!
ஆன்மாவைத்தொட்டால்
வாழ்க்கை...

Friday, April 22, 2011

கோபம் தன்னையே அழித்து விடும்

"ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு,
ஆத்திரம் அழிவைத் தரும்"
என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள்..

கோபம் ஏன் ஏற்படுகின்றது?

கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சூழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை காரணமாக உண்டாகிறது.

நாம் சொல்வதை (நம்மைவிட எளியவர்கள் என்று நாம் நினைக்கும்) மற்றவர்கள் மதிக்காத போது...

நம்முடைய பிரச்சனைகளை உரியவர்கள் உடனே நிவர்த்தி செய்யாத போது...

நாம் சொல்வது (தவறாகவே இருந்தாலும்) தவறு என்று பலர் முன்னிலையில் விமர்சிக்கப்படும் போது...

எதிர்பார்த்த மரியாதை கிடைக்காத போது... இப்படியே பல காரணங்கள் உள்ளன.
ஒருவன் நம்மைப் பார்த்து "கழுதை" என்று திட்டும்போது நாம் "குரங்கு" என்று பதிலுக்குத் திட்டினால் அந்தச் செயல்தான் reaction ஆகும்.

ஆக உடனே சிந்திக்காமல் ஏற்படும் ஒரு வித அதிருப்தியான வெளிப்பாடு தான் கோபம். அல்லது நம்மை நாமே தாழ்த்திக் கொண்டு சிந்திக்கும் போது ஏற்படும் எதிர் விளைவு கோபமாகும்.

கோபம் தன்னையே அழித்து விடும்.

மனிதத்துவம் என்பது சமூகத்துடன் ஒன்றி வாழ்வதாகும். ஒருவருக்கொருவர் அனுசரித்து - பாராட்டி - உதவி செய்து வாழ்வதாகும். இதற்கு பொறுமை இன்றியமையாததாகும்.

ஒரு மனிதனின் வெற்றிக்கு தடையாத இருப்பதில் மிக முக்கியமானது கோபமாகும்.

கோபம் கொள்வதால் நமது சிந்தனை, கவனம் போன்றன சிதறடிக்கப்படுகின்றன. சரியான சமயத்தில் செய்ய வேண்டிய செயல்கள் இதனால் பாதிக்படுகின்றன. நம்மை சுற்றி இருப்பவர்களைப் பற்றியும் சூழ்நிலையையும் உணராது நமது செயல்கள் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.

அவற்றுள்...

வாழ்வின் சந்தோசத்தை பறித்து விடும். (கோபமும் சந்தோசமும் ஒன்றுக்கொன்று எதிரானவைகள்)

திருமணம் மற்றுமுள்ள தொடர்புகளை அழித்து விடும்.

தொழிலை முடக்கி விடும். காரணம் தொழில் என்பது தொடர்புகளுடன் சம்பந்தப்பட்டது.

மனஇருக்கத்தை ஏற்படுத்தி இருதய வியாதிக்கு வழிவகுக்கும்.

முறையாக சிந்தித்து செயல்படுவதை தடுத்து நமது செயல்களை தவறானதாக்கி விடுகின்றது....கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள. 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு ஆகும். ஆனால் 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிரிழப்பு ஆபத்து 6 மடங்காக உயர்கிறது.

கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். இது மாரடைப்பில் விட்டு விடும்.

இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான்.

மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை அழிப்பதற்கு முன் நீங்கள் அதை அழித்து விட வேண்டியது முக்கியம்.

கோபத்தைக் கட்டுப்படுத்துதல்:

கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறான். இதனால் தான், கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் திடீரென அதிகரித்தல், எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.

கோபத்தை குறைக்க சில வழிகள்:

1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள். மற்றவர்களையும் அன்போடு பாருங்கள். நிதானமாக கோபமூட்டிய நபரின் சூழ்நிலையை சிந்தியுங்கள்.

2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள். உடனே உங்கள் மனதை வேறு விசயத்தில் திருப்புங்கள்.

3. அவசரம் ஒருபோதும் வேண்டாம். பொறுமையாக இருங்கள்

4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்.

5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.

6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் அதிகம் பேசாதீர்கள். மெளனமாக இருங்கள்

7. நமது கெளரவம் பாதிக்கப்பட்டதை மறந்து மற்றவர்களை விட நமக்கு இறைவன் அளித்த வாய்ப்புகளை நினைத்து இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

8. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.

9. சில நிமிடத்திற்கு உங்களது சூழ்நிலையை மாற்றுங்கள். அமர்ந்திருந்தால் எழுந்து நடங்கள். நடந்து கொண்டிருந்தால் சற்று நின்று கொள்ளுங்கள்.

10. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

11. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள். நீண்ட நாள் சந்தோசமாக வாழ வேண்டுமானால் நிச்சயம் நாம் கோபத்தை குறைத்தாக வேண்டும்.

Monday, April 18, 2011

நாம் எல்லோரும் குற்றவாளிகள்தான்...

"குற்றவாளிகள் உருவாவதில்லை உருவாக்கபடுகிறார்கள்"
என்று சொல்வார்கள் இவை முற்றிலும் உண்மை. குற்றம் உருவாவதற்கும் சமுகம் சார்ந்த காரணிகளும் அதில் நடக்கும் நிகழ்வுகள்களும் ஒரு காரணமாகவும் இருக்கிறது...

ஏசுநாதர், இருந்த ஊரில் ஒரு பெண் விபசாரம் செய்தால் என்று ஊர் மக்கள் அவளை கல்லால் அடித்து துரத்தி வந்தனர் அவள் எசுநாதரிடம் அடைக்கலாமானார். அப்போது ஏசுநாதர், "உங்களில் யார் ஒரு குற்றமும் செய்யவில்லையோ அவர்கள் இவள் மேல் கல்லை விசி எறியுங்கள்" என்றார். அக்கூட்டத்தில் இருந்த ஒருவரும் கல்லெறிய வரவில்லை... ஆம், இதில் நாமும் குற்றவாளி மீது கல்லெறிய முடியாது ஏனென்றால் நாம் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் இச்சமூகத்தில் குற்றவாளிகள்தான். மக்களுக்கு சிறிய, பெரிய குற்றங்கள் தெரியாதவரை அவை குற்றமாக தெரிவதில்லை அவையே தெரியும்போது ஏற்கனவே அக்குற்றத்தை தெரிந்தவருக்கு கூட மிக பெரிய குற்றவாளியாகதான் தெரியும். தெரிந்தவர்களும் குற்றவளியாகத்தான் இருப்பான் அவன் குற்றம் வெளியே தெரியாதவரை...

கவுன்சிலரா இருந்தவன் அமைச்சரானால் எப்படி எல்லாம் சம்பாதிக்க வேண்டும் என்பது அவனுக்கு சொல்லிய தெரியவேண்டியதில்லை... உழல் செய்த பணத்தில் சட்டத்தில் அவன் தேவையான அளவுக்கு வளைத்து கொள்வான். இதில் அவன் செய்த குற்றம் எப்படி, எப்படியோ நியாபடுத்தபடும்... ஜேப்படி திருடன் ஒருவன் திருடினான் என்பதற்காக கைதாகிறான். இவன் குற்றவாளி, குற்றவாளியாககூட ஆக்கபடுகிறான்... அதே பல கோடி உழல் செய்யும் அரசியல்'வியாதி' அவனும் மக்கள் பணத்தைதான் திருடுகிறான் அப்படியென்றால் அரசியல்'வியாதியும்' ஒரு ஜேப்படி திருடந்தானே... ஆனால் இவன் சமூகத்தால் மதிக்கபடுகிறான். அத்திருடன் மிதிகபடுகிறான் இதுதான் சமுகத்தின் பார்வையில் இருக்கும் குற்றத்தின் ஏற்ற இறக்கம்...

பெண்களின் பெருமையை பற்றி மணிகணக்காக பேசுவார்கள் பெண்களை தாய் என்பார்கள் சகோதரி என்பார்கள் ஒரு படிமேலே போய் எங்கள் தெய்வங்களே பெண்கள்தான் என்பார்கள் ஆனால் திரைமறைவில் பெண்களிடம் அவர்கள் செய்யும் லீலைகள் தெரிந்தால் நாறிவிடும்... வாய்ப்புகள் கிடைக்காதவரை எல்லோரும் யோக்கியவான்கள்தான் வாய்ப்புகள் கிடைத்தால் தெரிந்துவிடும் அவர்கள் உண்மை முகம்...

சமூக சுத்தத்தை பற்றி பேசுவார்கள் அரசாங்க எதையும் சுத்தமாக வைத்துகொல்வதில்லை என்று சொல்வார்கள் அது சரி இல்லை இது சரி இல்லை என்று ஒரு பட்டிமன்றம் வைத்தால் அவர்கள்தான் அதில் வெற்றி பெருமளவுக்கு அவர்கள் வாதம் இருக்கும் ஆனால் அப்படி பேசிவிட்டு சாதாரணமா எச்சிலை கண்ட இடத்தில் துப்புவார்கள், கண்ட இடத்தில் குப்பைகளை கொட்டுவார்கள், இன்னும் செய்யகுடாத செயல் எல்லாம் செய்வார்கள். ஒவ்வொருவரின் உண்மை முகம் தெரிந்தால் அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் அதிக வித்தியாசம் இருக்கும். இந்த மாதிரி தவறுகள் எல்லாம் எப்படி வருகிறது. இதுவும் ஒரு குற்றமான ஒரு செய்யல்தான்...

ஒவ்வொருவரின் வாழ்விலும் தினம்தோறும் அறிவுக்கு அப்பாற்பட்ட செயல்கள்தான் நடக்கிறது. அதில் முக்கள்வாசி அருவருப்பாகதான் இருந்துகொண்டிருக்கிறது.

Tuesday, April 5, 2011

குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதவை


குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தைகள் முன்னிலையில் செய்யக்கூடாத, சொல்லக்கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். குழந்தைகள் முன்னிலையில் செய்யக் கூடாதது என்னென்ன?

* கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.


* குழந்தைகள் முன்னிலையில், பிறரை பற்றி தேவையில்லாமல் விமர்சிக்காதீர்கள். உதாரணமாக, "உங்கள் பிரண்ட் மகா கஞ்சனாக இருக்கிறாரே' என்று நீங்கள் உங்கள் கணவரிடம் கேட்டதை நினைவில் வைத்துக் கொண்ட குழந்தை, அவர் வரும் போது, "அம்மா கஞ்சன் மாமா வந்து இருக்கிறார்' என்று சொல்ல நேரிடலாம்.

* தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

* சிறு குழந்தைகளை மிரட்டும் போது, "கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன்" போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

* சில தாய்மார்கள் சில விஷயங்களை தங்கள் கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், "அப்பாகிட்டே சொல்லிடாதே' என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே "அப்பாக்கிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டும்.

* குழந்தைகளிடம் அவர்கள் டீச்சரைப் பற்றி கமென்ட் அடிக்கக் கூடாது. "உங்க டீச்சருக்கு வேற வேலை இல்லை; உங்க டீச்சருக்கே ஒண்ணும் தெரியலே' போன்ற வார்த்தைகளை அவர்களிடம் கூறக் கூடாது. அப்படி கூறினால், குழந்தைகள் அவர்கள் ஆசிரியர் மீது வைத்திருக்கும் மதிப்பு குறைந்து, அவர்கள் படிப்பை பாதிக்க வழிவகுக்கும்.


* குழந்தைக்கு எதற்கெடுத்தாலும் காசு கொடுத்துப் பழக்கக் கூடாது. அதிலும் கமிஷன் கொடுத்து பழக்கப்படுத்துவது கூடவே கூடாது. " கடைக்குப் போய் ஷாம்பூ வாங்கிட்டு வந்தால், உனக்கு சாக்லேட் வாங்க காசு தருவேன்' என்பது போல பேசுவதை தவிருங்கள். இல்லாவிட்டால், நாளடைவில் ஒவ்வொன்றிற்கும் காசை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவர்.

* குழந்தைகள் முன்னிலையில் தரமான படங்களையே பார்க்க வேண்டும். நீங்கள் வாங்கும் புத்தகங்களும் தரமாக இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும்.

* உங்கள் குழந்தையுடன் அடுத்த வீட்டுக் குழந்தையை ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அப்படி பேசினால், குழந்தையின் மனதில் தாழ்வு மனப்பான்மை வளரும்.

* படிப்பு விஷயத்தில் குழந்தைகளைக் கண்டிக்கும் போது, "பாசிடிவ் அப்ரோச்' இருக்க வேண்டும். "நீ நன்றாக படித்தால் டாக்டராவாய்; நன்றாக விளையாடு பெரிய ஸ்போர்ட்ஸ்மேன் ஆகலாம்' என்று கூறி, ஊக்கப்படுத்த வேண்டும். "நீ படிக்கிற படிப்புக்கு பியூன் வேலை கூட கிடைக்காது. இந்த மார்க் வாங்கினா மாடு தான் மேய்க்கலாம்' என்றெல்லாம் பேசி, பிஞ்சு மனதை வேதனை அடைய செய்யக் கூடாது.

* குழந்தை முன்னிலையில் உங்கள் கணவர், வீட்டில் இருக்கும் பிற நபர்கள் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது, புகையிலை போன்ற செயல்களை மேற்கொள்ள ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

Friday, April 1, 2011

பெண்களுக்கு என்ன பிடிக்கும்... டாப் டென் விஷயங்கள்.

1. பத்து பெண்கள் இருக்கும் இடங்களில், தனக்குரியவர் முதலில் தன்னிடம் பேசுவது பிடிக்கும்.

2. தன் தோழியை அறிமுகப்படுத்தி வைக்கும் போது, நாகரீகமாய் நடந்துக்கொள்ளும் ஆண் பிடிக்கும்.

3. கவலையான நேரங்களில்,ஆறுதலாய் நிற்கும் அனுசரணையான மனிதர்கள் பிடிக்கும்.

4. பரிசளிக்க, பெற பிடிக்கும்.(பரிசாக பெறப்பட்ட பொருட்களை மற்றவர்களிடம் காட்டி, சன்னமாக அலட்ட பிடிக்கும்.

5. தன்தோற்றம் பற்றிய உயர்வான மதிப்பீடு எப்போதும் இருக்கும்.யாராவது வாய் விட்டு பாரட்ட.... அட அட மனசு நிறையும்.

6. ஊராரிடம் கம்பீரம்,புத்திசாலித்தனம்,வலிமை காட்டும் ஆண், தன்னிடம் அமைதி காட்ட மிக பிடிக்கும். (பணிவை பொறுத்தவரை ஆண்கள் ஒரு அடி வைத்தால் பெண்கள் இரு அடி வைப்பார்கள், அடக்கினால் ஒரு அடிக்கு பதில் நாலு அடி)

7. உறவுகளில் எப்போதும் பிற்கால லாபத்தை மனதில் கொண்டு முடிவெடுக்க பிடிக்கும்.

8. அழுகை, பூ, பூஜை, பணம், சீரியல், நகை, ஆடை அலங்காரம், அடுத்தாத்து அம்புஜத்துடன் ஒப்பீடு, நாயம் (?) பேசுதல் இவை வழக்கமான பிடிப்புக்கள்.

9. நீங்கள் சொல்லுவதற்காக காலியாக விடுகிறோம்.

10. பெண்களுக்கு - பிடிசவங்க; பிடிக்காதது செஞ்சாலும் பிடிக்கும், பிடிக்காதவங்க; பிடிச்சதை செஞ்சாலும் பிடிக்காது.