Friday, February 25, 2011

நொடிகளும் நிமிடங்களும்

நான்
நானாக இருக்க
முக்கியகாரணம்
நீதான்......

ஜீபூம்பா மாதிரி
நேரங்களும்
நொடிகளும்
நிமிடங்களும் செல்கின்றன...
உன்னோடு நான் பேசுகையில்....

எத்தனை தவறுகள் செய்தாலும்
உன்னிடம் மட்டும், நான்
உண்மையாகவே
இருக்க விரும்புகின்றேன்...

முடியாது என்று தெரிந்தும்
விடாமுயற்ச்சியுடன்
என்னையும் அழகு படுத்து
முயற்ச்சிப்பவள் நீதான்....

நீ
என்னை தொட்ட
நொடிகளில்
லேடிஸ் பிங்கரின் அர்த்தம்
முழுதாய் விளங்கியது...

எதைகண்டு
மயங்கினாய் என்னிடம்?
லேசான நகைச்சுவையும்,
பளிர்சிரிப்பையும் தவிர,
என்னிடம் என்ன இருக்கின்றது?

சில நேரங்களில்
பயங்கர கோபம்வரும்
உன்மீது....

உன்னை அழ வைக்க
எனது மனம் கணக்கு போடும்...

சாத்தியமில்லாத செயல், என்று
சிரிக்கின்றது...
எனது மனசாட்சி...

மாதத்தில் இரண்டு பீரை
ஒன்றாக குறைத்த சர்வாதிகாரி
நீதான்....

நீ
நானாக இருப்பதால்,
நான் நானாக இல்லை...

உன்னிடம் மட்டும்
முடியாது என்று தெரிந்தும்...
முடியும் என்று,
பந்தயம் கட்டுகின்றது
என் இளகிய மனது...

நீ
என் மடியில்
தலைசாயும் போதுதான்..
பல
கூடுதல் பொறுப்புகள்
நினைவுக்கு வந்து தொலைக்கின்றன....

அரை மணி நேரம்
என் வாயில் அரைபட்ட
சூயிங்கம் கூட
உனக்கு அல்வாதான்....

கண்ணெதிரே
கூடுதல் சுவை சேர்க்கபட்டது
நீ
கடித்து கொடுத்த,
சாக்லெட்டில்...

Monday, February 14, 2011

நீயில்லாத வாழ்க்கையா?

கடலலைகள் நம் பெயரை
அழித்ததையே
என் மனம் ஏற்க மறுக்கும். இனி
எங்கனம் உன்னை மறக்கும்

கைகோர்த்து சென்ற இடமெல்லாம்
உன்னை கேட்டு நச்சரிக்கும்
இனி
கண்ணீர் மட்டுமே பதில்களை
உச்சரிக்கும்

நித்தமும் புதிதாய் மலர்ந்ததை
கண்டு
கோபம் கொண்ட பொறாமை
மலர்களும்
என்னை கேலி செய்யும். இனி
என்ன சொல்லி நான் ஜெயிக்க இயலும்

வழக்கமாய் அமரும் பூங்காவின் இருக்கைகளும்
என்னை பாவமாய் பார்க்கும்
நீ தான் காரணம் என சொன்னாலும் நம்பாமல்
நம் பழைய சண்டைகளை நினைவுப்படுத்தி
என் மேல் பழி போடும்

உயிரே
அழகிய மலர்வெளியில்
நெருஞ்சியை விதைத்தது யாரோ?
காலமும் மருந்தாகாத
விஷத்தை
நம் காதலில் ஊட்டியதும் யாரோ?

காதலி
வெற்று மனதில் காதலை
நிறைத்து - இன்று
வெறுமையாக்கி விட்டது
நீயடி
கண்ணீர் துடைபவளே - என்
கண்ணீருக்கு காரணமானதும்
ஏனடி?

மழை நீருடனும்
கடல் நீருடனும்
கனவிலும் நினைவிலும்
வழியும் விழிநீரை
உன்னையன்றி யாரறிவார்

பூகம்பம் வந்தது போலும்
பிரளயம் கண்டது போலும்
என் மனம் சிதறி வெடித்தால்
நான் கண்ட சேதத்தை
எதை கொண்டு அளப்பாய்

காகிதத்தில் வடித்ததை
எளிதில் எரிப்பாய்
என் இதய கல்வெட்டில்
செதுக்கியதை
எவ்வாறு அழிப்பாய்

காதல் என்னும் சொர்க்கத்தில்
நான் கழித்த நாட்களையும்
பிரிவென்னும் துயர நரகில்
நான் தொலைத்த
சந்தோஷத்தையும்
எப்படி மீட்டு தருவாய்

எல்லாம் இருந்தும் நீயில்லை
எல்லாரும் சூழ்ந்த போதும்
உன் இடத்தை நிரப்ப ஆளில்லை

நகரும் நரக நாட்களிலும்
வதைக்கும் தனிமை இரவுகளுடனும்
சுட்டெரிக்கும் நிலவுடனும்
கலகம் செய்யும் தென்றலுடனும்
கானல் நீராய் போன
உன்னை நினைத்து நினைத்து
என் உயிரும்
மெல்ல மெல்ல மறைகிறது...