Saturday, July 31, 2010

காதல் இனிமையானது

காதல் புனிதமானது அது எந்த சூழ்நிலையிலும் எந்த வயதிலும் வரக்கூடிய ஒரு மெல்லிய உணர்வு. இன்று நம்மில் பலர் தவறாக எண்ணிக் கொண்டுள்ளோம். இளம்வயதில் அதாவது படிக்கும் பருவமான டீன்ஏஜ் பருவத்தில் வருவதுதான் காதல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். காதல் உயிரின் ஜனனம் முதல் மரணம்வரை தொடரும். காதல் என்பது ஒரு உயிர் உருவாவதற்கு முன்னரே காதல் வந்துவிடுகிறது.

உதாரணத்துக்கு ஒரு தாய் தன்வயிற்றில் கரு உண்டான உடனே தான் குழந்தையின் மேல் அதீதபாசம் கொண்டுவிடுகிறாள். பெற்றோர்கள் தன் குழந்தையை நேசித்து அப்பொழுதே காதலாகி கனவுகாண தொடங்கிவிடுகிறார்கள். பெற்றோர் தன் குழந்தையின் மீது உண்டான பாசமும் காதல்தான். பிள்ளை பெற்றோரின்மேல் கொண்ட பாசமும் காதல்தான். இப்படி எதுஎதன் மேல் அன்பு செலுத்துகிறோமோ அதெல்லாம் காதல் தான்.

காதலில் அன்பு, பாசம், நேசம், ஆசை, விருப்பம் இதெல்லாம் அடங்கிவிடுகிறது. நம்மவர்கள் இளம்வயதில் வருவதுதான் காதல் என்று காதலை கொச்சைப்படுத்துகிறார்கள். இளவயது காதல் எதனால் உண்டாகிறது என்றால் பையனோ பெண்ணோ தன்னுடன் படிக்கும் அல்லது தன்னுடன் பணிபுரிபவர்களிடமோ வருகிறகாதல். ஒருவர்மேல் ஒருவர் ஈர்க்கப்பட்டு அவர்களின் செயல்பாடுகள் கவரும்படியாக அமைந்துவிட்டால் அங்கே இருவருக்கும் காதல் உருவாகிவிடுகிறது. அவன்/அவள் செய்யும் சின்னசின்ன நடவடிக்கைப் பிடித்துபோய் இவர்கள்தான் நம்மீது உண்மையான அன்பு செலுத்துகிறான்/ செலுத்துகிறாள் என்ற எண்ணம் உருவாகிவிடுகிறது.

இருவரின் மனங்களும் ஒத்துப்போய் அன்பு செலுத்துவதினால் காதல் ஏற்பட்டுவிடுகிறது. இதனால்தான் இன்று நிறைய காதல் திருமணங்கள் பெருகிவருகின்றன. இதற்கு இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் காதல் திருமணங்களை அங்கீகரிப்பதில்லை. தாங்கள் இருபது வருடங்களாக தங்கள் பிள்ளைகள் பொத்திபொத்தி வளர்த்தபின் எங்கிருந்தோ வந்த முன்பின் பழக்கமில்லாத இன்னொருவனுடன்/இன்னொருவளுடன் காதல் என்றுவரும்போது மனம் ஏற்கமறுக்கிறது. எங்கே தங்கள் பிள்ளைகள் வழிமாறி சென்று வாழ்க்கையில் கஷ்டப்படுவார்கள் என்ற கவலையில்தான் பெற்றோர்கள் காதலை ஏற்கமறுக்கிறார்கள். இதுதான் உண்மை.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள்மீதான கனவில் களங்கம் வரும்போது அவர்களால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. மனம் வேதனைப்படுகிறது. ஆனால் காதலர்கள் இதை அலட்சியம் செய்து பெற்றோர்களின் மனதை புரிந்துகொள்வதில்லை. சிறிது காலம் சென்றபின் காதல்வாழ்க்கை கசந்தபின் திரும்பிவரும்போது பெற்றோர்கள் மன்னித்து சந்தோசத்துடன் அவர்களை ஏற்றுக்கொளும்போது இழந்ததை மீட்ட சந்தோசம் வந்துவிடுகிறது.

இந்தமாதிரி சூழ்நிலையை தவிர்க்க பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிப்புடன் வளர்க்கிறார்கள். இதையும் மீறி பிள்ளைகள் தவறான வழியில் சென்றுவிடுகிறார்கள். இதுமாதிரி நடக்காமலிருக்க பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உண்மைநிலையை தெளிவாக விளக்கவேண்டும். ஒரு நல்ல நண்பனைப்போல அவர்களோடு மனம்விட்டு பேசவேண்டும். இதெல்லாம் இப்போது சரியாகத் தோன்றும்; பின்னால் இப்படி நடந்தற்காக நாம் நிறைய வருத்தப்படவேண்டி வரும் என்று புரியவைக்க வேண்டும். அப்போதுதான் வழி தவறமாட்டார்கள். பிள்ளைகளும் நம் வாழ்க்கைக்கு தேவையானதை நிதானமாக சிந்தித்து சரியான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதனால்தான் இளம்வயதில் வ‌ரும் காதலை வேண்டா வெறுப்பாக எல்லோரும் நினைக்கிறார்கள். திருமணத்துக்கு பின் வரும் காதல் என்றென்றும் அழியாதது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து புரிந்து கொண்டு வாழும் வாழ்க்கை ரொம்ப அர்த்தமுள்ளதாகும். காதல் நமக்குள் வரும்போது சாதிமத பேதங்கள் நம்மைவிட்டு வெகுதூரம் சென்றுவிடும். அன்பால் எதையும் சாதிக்கலாம். வன்முறைகள் எதுவும் நடக்காது. இது தெரியாமல் ஒவ்வொருகொருவர் சண்டையிட்டு மடிகிறார்கள். இந்த உலகில் காதலிக்காதவர்கள் இருக்கவே முடியாது. மனிதர்களுக்கு மட்டுமின்றி ஒவ்வொரு உயிருக்கும் காத‌ல் உண்டு.

காதலால் தவறான பாதையில் மனம் செல்லாது. காதல் நியூட்ட‌னின் முதல் விதியைப் போல...

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்றமுடியும்.

இதுபோலதான் காத‌லும். காதலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துங்கள்.

Thursday, July 15, 2010

Herbal Skin Care Tips

Here are 22 practical Herbal Tips for Skin Care from the experts! Very easy to use and effective.
1) Drink at least 8 glasses of water every day.

2) Cut some beet root into small pieces and grind them. Squeeze juice from beet root and massage to your face for 5 minutes. Shower after 10 minutes with mild soap or gram flour.
3) Mix sandalwood powder with rose water and add 4 to 5 drops of milk in it and apply on to your face and body. Shower after 15 minutes with warm water.
4) Mix honey in water and drink daily in the morning to keep your skin shiny and smooth.

5) Warm honey and mix with lemon juice and apply on to face. Wash after it dry.

6) Mix Turmeric, sandal powder and olive oil and apply to body. Shower after 10 minutes.

7) Massage your skin with milk. Milk has moisturizer, it will keep your skin smooth.

8) Use humidifiers and keep room temperature moderate to keep your skin away from dryness.

9) Hot water blushes your skin and you don’t feel fresh unless you have bath with little cold water. If you have shower for a longtime, dead skin will be automatically be removed. Do not rub with towel, be gentle on your skin.

10) Take food which contains more A and C vitamin.

11) Grate carrot and boil. Massage that mixture to body to get fair and smooth skin.

12) For natural bleaching: - mix milk and lemon juice. The milk will break as soon as you mix the lemon juice in it. Use that mixture to massage on your body. It works as natural bleaching.

13) Mix turmeric and cream on the top of milk, massage that mixture to body.

14) If you go into sun your skin will lost the fair ness. To get your skin color to normal take equal quantities of cucumber juice and tomato juice and apply on to skin. Shower after 10 minutes.

15) Massage mustard oil to your skin for 5 minutes and have shower with gram flour or mild soap.

16) Mix cream on the top of milk and all-purpose flour and apply that paste on to your skin avoid eyes, eyebrows and lips. Shower after 5 minutes. This will make skin smooth.

17) Mix curds (yogurt) with wheat flour and apply to your skin and take shower after 5 minutes.

18) Grind rose petals and mix with cream on the top of milk and apply to your body. Shower after 10 minutes.

19) Scaly skin is a result of fluorine deficiency. Fluorine is the anti-resistant element of the human body, the absence of which creates problems in the blood and spleen. Since cooking and heating foods destroys fluorine, it is better to eat uncooked raw fruits and vegetables. Other foods rich in fluorine are goat milk and cheese, rye flour, avocados, sea plants and cabbage, cream whey and cottage cheese.

20) Wrinkle skin is a result of Sodium deficiency and makes skin sticky. Cucumbers are ideal for combating and preventing sodium deficiency because they are not only high in sodium, but also help in keeping the body cool, a great summer’s treat.

21) Skin rashes are the result of silicon deficiency. To avoid pus and rashes, eat plenty of sprouts, alfalfa, barley, tomatoes, spinach, strawberries and figs.

22) Skin eruptions are the result of Chlorophyll. And are found in wheat grass and other green leafy vegetables

Friday, June 25, 2010

ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்


ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்குற, ஆனா கேட்க முடியாம மனசுக்குள்ளேயே புதைச்சு வெச்சுக்குற சில கேள்விகளை, நாம இந்தப் பதிவுல பார்க்கலாம்.

1. நாங்கதான் உங்களுக்கு ரீ-சார்ஜ் பண்ணி அனுப்புறோம். ஆனாலும் நீங்க எதுக்கு மிஸ்டு கால் கொடுத்தே எங்க உயிரை வாங்குறீங்க? உங்ககிட்ட ஃபோன்ல பேசின காசையெல்லாம் சேர்த்து வெச்சிருந்தா, நான் லோன் போட்டு பைக் வாங்கி இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.

2. ஒரு பொண்ணு கொடுக்குற மிஸ்டு காலை மட்டும் யாராலும் அட்டெண்ட் பண்ணவே முடியாது. அவ்ளோ ஷார்ப்பா கட் பண்ணுவாங்க. இப்படி மிஸ்டுகால் கொடுக்க நீங்க எந்த யுனிவர்சிட்டியில ட்ரெயினிங் எடுத்துகிட்டிங்க?

3. அது ஏன் எப்போ பார்த்தாலும், எது கேட்டாலும் ஹி.. ஹி'ன்னு சிரிச்சுகிட்டே இருக்கீங்க? ஒரு மணி நேரம் உங்ககிட்ட ஃபோன்ல பேசினா அதுல நாற்பது நிமிஷம் கேனத்தனமா சிரிச்சுகிட்டேதான் இருக்கீங்க. ஏன் நீங்க ஏதாவது பேஸ்ட் விளம்பரத்துல நடிக்கிறதுக்கு எங்ககிட்ட ட்ரெயினிங் எடுக்கிறீங்களா?

4. ஃபோன்ல நாங்களேதான் பேசிகிட்டு இருக்கோம். எதைக்கேட்டாலும் "நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்க'ன்னா" நாங்க என்னத்தை சொல்லி தொலைக்குறது? உங்களுக்கு எதையுமே பேச தெரியாது போலன்னு நினைச்சு நாங்க பாட்டுக்கு எதையாவது சொல்லி தொலைச்சுடுவோம். அதையே மனசுல வெச்சுகிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கி கட்டிக்கிறது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அது எப்படி பேசவே தெரியாத மாதிரி சீன் போடுறீங்க?

5. மெசேஜ்'ல மட்டும் ரொம்ப ரொமாண்டிக்கா SMS அனுப்பி எங்க தூக்கத்தை கெடுக்குறீங்க. ஆனா அதையே நேர்ல சொல்ல சொன்னா மட்டும் வெட்கத்தையே என்னமோ நீங்கதான் குத்தகைக்கு எடுத்த மாதிரி வெட்கப்படுறீங்க? இது எப்படி உங்களால மட்டும் முடியுது? மெசேஜ் அனுப்பும் போதெல்லாம் உங்க வெட்கத்தை என்ன ஃப்ரிட்ஜ்'க்கு உள்ளே ஒளிச்சி வெச்சிடுவீங்களா?

6. ஹேய்... உனக்கு எப்படி அது தெரியும்? அப்படிங்கிற கேள்வியை மட்டும் கேட்டுட்டா போதும். உடனே "நான் உங்க இதயத்துல தானே இருக்கேன். இது கூட எனக்கு தெரியாதான்னு" உடனே ஒரு டயலாக் விடுவீங்க. இந்த மாதிரி எல்லாம் டயலாக் விட டைரக்டர் கதிர்கிட்ட கத்துகிட்டீங்களா என்ன?

7. Loss of Pay' ல லீவு போட்டுட்டு, உங்களை பைக்ல தியேட்டருக்கு கூட்டிட்டு போனா, அப்பத்தான் ரொம்ப கவனமா ஹேண்ட் பேகை எடுத்து நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல வெச்சுகிட்டு வருவீங்க. என்ன கொடுமை சார் இதெல்லாம்?

8. அப்புறம் அப்புறம்'ங்கிற மொக்கையவே அரை மணி நேரமா போடுறீங்க. சரி வெச்சுடுறேன்னு நாங்க ஃபோனை கட் பண்ண போகும்போதுதான் "என் கூட பேசறது உங்களுக்கு போரடிக்குதா"ன்னு ஒரு சென்டிமென்ட் சீன் ஓபன் பண்ண வேண்டியது. உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?

9. நீங்க கிஃப்ட் கொடுத்தா மட்டும் விலையைப் பார்க்க கூடாது. அதுல உங்க அன்பைத்தான் பார்க்கணும். ஏன்னா நிச்சயமா அந்த கிஃப்ட் கீ-செயினாவோ, கர்ச்சீஃபாவோ, இல்லை அதிகபட்சமா மணிபர்ஸாவோதான் இருக்கும். ஏன்னா அதுங்கதான் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும். ஆனா இதே நாங்க கிஃப்ட் கொடுக்கும் போது மட்டும் சுடிதாரோ, செல்ஃபோனோ, தங்க செயினோ, வெள்ளி கொலுசோ, குறைஞ்சது 3,000/- ரூபாய்க்கு செலவு பண்ணாதான் நாங்க உங்க மேல உண்மையான அன்பு வெச்சிருக்கிறதா அர்த்தம். என்ன கரெக்ட்டா? உங்க அன்போட அளவுகோலுக்கு எல்லையே கிடையாதா?

10. "உன் நியாபகமாவே இருந்துச்சு. ராத்திரி எல்லாம் தூக்கமே வரலை"ன்னு மனசாட்சி இல்லாம பொய் சொல்றீங்களே.. என் நியாபகமாவே இருந்துச்சினா என் கூட பேச வேண்டியது தானே. இந்தக் கேள்வியை நாங்க கேட்டுடக் கூடாதுனு அர்த்த ராத்திரியில பேய் முழிச்சுகிட்டு இருக்கிற நேரத்துல, ஒரு மிஸ்டுகால் கொடுத்துட்டு, மறுநாள் காலையில உனக்கு என் நியாபகமே இல்லைன்னே சண்டை போட வேண்டியது. இந்த விஷயத்துல சத்தியமா உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.

11. நீங்க யூஸ் பண்ணி தூக்கி போட்ட பொருளை எல்லாம் நாங்க சேர்த்து வெச்சிருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களே, நாங்க என்ன நீங்க தூக்கி போடுறதை எல்லாம் சேர்த்து வெக்கிற குப்பை தொட்டியா?

நண்பர்களே இந்தக் கேள்விகளை எல்லாம் படிக்கிறதோட நிறுத்திக்குங்க. தப்பித்தவறி கூட இந்தக் கேள்விகளை நீங்க உங்க காதலிகிட்ட கேட்டீங்கன்னு வெச்சுக்குங்களேன்........அவ்வளவுதான் ஜோலி முடிஞ்சுது.

Thursday, June 17, 2010

கிளிக் செய்யாமலேயே தேடுவதற்கு ஒரு தேடியந்திரம்

எத்த‌னை கால‌ம் தான் கூகுலையே ப‌ய‌ன்ப‌டுத்திக் கொண்டிருப்ப‌து ஒரு மாற்ற‌ம் தேவை என‌ நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக புதியதொரு தேடியந்திரம் அறிமுகம் ஆகியுள்ளது. கூகுலை விட்டு விட்டு இனி தாரளமாக அந்த தேடியந்திரத்தை பயன்படுத்தி பார்க்கலாம்.

அட போங்கய்யா கூகுலைவிட சிறந்த தேடியந்திரமா? எத்தனை முறை இதே வர்ணனையை கேட்டு ஏமாந்திருக்கிறோம் என அலுத்து கொள்பவர்கள் கவனிக்க உண்மையிலேயே சூப்பர் தேடிய‌ந்திரம் இது என்ப‌தை உறுதியாக‌ சொல்ல‌லாம்.

ட‌க்ட‌க்கோ என்னும் விநோத‌மான‌ பெய‌ர் கொண்ட‌ அந்த‌ புதிய‌ தேடிய‌ந்திர‌ம் உண்மையிலேயே கூகுலுக்கு மாற்றாக‌ விள‌ங்க கூடிய‌ ஆற்ற‌லை பெற்றிருக்கிற‌து.

இணைய‌ உல‌கில் ச‌ற்றேர‌க்குறைய‌ இர‌ண்டாயிர‌த்துக்கும் அதிக‌மான‌ தேடிய‌ந்திர‌ங்க‌ள் உள்ள‌ன‌. இவ‌ற்றில் ப‌ல‌ அறிமுக‌மாகும் போது கூகுலுக்கு மாற்று என‌ வ‌ர்ணித்துக்கொள்வ‌து வ‌ழ‌க்க‌ம் தான். ஒரு சில‌ தேடிய‌ந்திர‌ங்க‌ளை அடுத்த‌ கூகுல் என்று ப‌த்திரிகைக‌ள் வ‌ர்ணிப்ப‌தும் வ‌ழ‌க்க‌ம். ஆனால் இதுவ‌ரை எந்த‌ தேடிய‌ந்திரத்தாலும் கூகுலை ஒர‌ங்க‌ட்ட முடிய‌வில்லை.

முன்னால் கூகுல‌ர்க‌ளால் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌ குயில்(cuil) தேடிய‌ந்திர‌ம் கூட‌ இப்ப‌டி தான் கூகுலுக்கான‌ சவால் என்று அழைக்க‌ப்ப‌ட்டு ஏக‌ ப‌ர‌ப‌ர‌ப்பை ஏற்ப‌டுத்திய‌து. அத‌ன் பிற‌கு என்ன‌ ஆன‌து என்றே தெரியாம‌ல் போய் இப்போது விக்கிபீடியா பாணியில் க‌ள‌ஞ்சிய‌ தேடிய‌ந்திர‌மாக‌ தன்னை உருமாற்றி கொண்டுள்ள‌து.

தேடிய‌ந்திர‌ வ‌ர‌லாற்றை அறிந்த‌வ‌ர்க‌ள் புதிய‌ தேடிய‌ந்திர‌ங்க‌ள் வ‌ரும் போகும் ஆனால் கூகுல் எல்லோராலும் நாட‌ப்ப‌டும் தேடிய‌ந்திர‌மாக‌ தொட‌ரும் என்ப‌தை அறிந்தேயிருப்பார்க‌ள். அதிலும் சாம‌ன்ய‌ இணைய‌வாசிக‌ளை பொருத்த‌வ‌ரை தேட‌ல் என்றால் கூகுல் தான்.

கூகுல் அத‌ன் வேலையை ஒழுங்காக‌ செய்கிற‌து என்ப‌தும் அத‌னை மிஞ்ச‌க்கூடிய‌ தொழில்நுட்ப‌ம் இன்னும் சாத்திய‌மாக‌வில்லை என்னும் நிலையில் இன்னுமொரு தேடிய‌ந்திர‌மாக‌ உத‌ய‌மாகியுள்ள‌ ட‌க்ட‌க்கோ மாறுப‌ட்ட‌ தேடிய‌ந்திர‌ம் என்னும் உண‌ர்வை முத‌ல் பார்வையிலேயே த‌ந்து விய‌க்க‌ வைக்கிற‌து.

கூகுலைப் போல‌வே இன்னொரு தேடிய‌ந்திர‌ம் என்று த‌ன்னை பற்றி அட‌க்க‌மாக‌வே கூறிக்கொள்ளும் ட‌க்ட‌க்கோ கூகுலுக்கு ப‌திலாக‌ ஏன் த‌ன்னை முய‌ன்று பார்ப்ப‌த‌ற்கு என்று நெத்திய‌டியாக‌ சில‌ கார‌ண‌ங்க‌ளை ப‌ட்டிய‌லிடுகிற‌து.

கூகுலை விட‌ சிக்க‌ல் இல்லாத‌ தேட‌ல் பக்க‌ம், விள‌ம்ப‌ர‌ இடையூறு இல்லாத‌ தேட‌ல் முடிவுக‌ள், சிற‌ப்பான‌ குறுக்கு வ‌ழிக‌ள் என‌ நீளும் அந்த‌ ப‌ட்டிய‌லில் உண்மையிலேயே நெத்திய‌டியான அம‌ச‌ம் பூஜ்ய‌ கிளிக் வ‌ச‌தியாகும். ஜீரோ கிளிக் என‌ குறிப்பிட‌ப்ப‌டும் இந்த‌ வ‌ச‌தியை கிளிக் செய்யாம‌லேயே தேடுவ‌து என‌ புரிந்து கொள்ள‌லாம்.

அதெப்ப‌டி கிளிக் செய்யாம‌லேயே தேடுவ‌து சாத்திய‌ம்?வழக்கமாக தேடும் போது என்ன செய்வோம். கீவேர்டை டைப் செய்துவிட்டு தேடு என க‌ட்ட‌ளையிடுவ‌து போல‌ என்ட‌ர் த‌ட்டுவோம் அல்ல‌வா? அத‌ன் பிற‌கு தேட‌ல் முடிவுக‌ள் வ‌ந்து நிற்கும் அல்ல‌வா? அதில் ஏதாவ‌து ஒன்றை கிளீக் செய்தால் தான் தேவிஅயான் த‌க‌வ‌ல்க‌ளை பெற‌ முடியும். ஆனால் ட‌க்ட‌க்கோ தேடிய‌ந்திர‌மோ கிளிக் செய்த‌துமே தேட‌ப்ப‌டும் ப‌த‌ம் தொட‌ர்பான அறிமுக குறிப்புக‌ளாக‌ சில‌ த‌க‌வ‌ல்க‌லை அளிக்கிற‌து.

இந்த‌ குறிப்புக‌ள் மிக‌ச்ச‌ரியாக‌ தேட‌ப்ப‌டும் பொருள் குறித்த‌ ச‌ரியான‌ அறிமுக‌மாக‌ அமைந்து விடுகிற‌து. உதார‌ன‌த்திற்கு பிரெஞ்சு ஒப‌ன் என் தேடினால் பாரிசில் மே மாத‌ம் துவ‌ங்கி ந‌டைபெறும் டென்னிஸ் போட்டி என்ற‌ அறிமுக‌ம் கிடைக்கிற‌து. ப‌ல‌ நேர‌ங‌க்ளில் தேட‌ப்ப‌டும் பொருளை புரிந்து கொள்ள‌ இந்த‌ அறிமுக‌ம் உத‌வ‌லாம். சில‌ நேர‌ங்க‌ளில் இந்த அறிமுக‌மே கூட‌ போதுமாக‌ இருக்க‌லாம். புதிய‌ பொருள் குறித்து மிக‌ அவ‌ச‌ர‌மாக‌ தேடும் போது அறிமுக‌ குறிப்புகள் நிச்ச‌ய‌ம் ப‌யனுள்ள‌தாக‌ இருக்கும்.

விக்கிபீடியா போன்ற‌ த‌ள‌ங்க‌ளில் இருந்து எடுக்க‌ப்ப‌ட்டாலும் கூட இந்த‌ அறிமுக‌ம் ப‌ய‌னுள்ள‌தாக‌வே இருக்கிற‌து. விரிவான‌ தேட‌ல் தேவை என்றால் ப‌க்க‌வாட்டில் உள்ள‌ வ‌ச‌தியை துணைக்கு அழைத்து யூடியூப் உட‌ப‌ட‌ ப‌ல‌ இட‌ங்க‌ளில் தேட‌ முடியும்.

இந்த‌ தேடிய‌ந்திர‌த்தில் கூகுல் என‌ டைப் செய்து பார்த்தால் கூகுல் என்றால் ப‌ல‌ அந்த‌த‌ம் உண்டு உங்க‌ளுக்கு எது வேண்டும் என்று கேட்க‌ப்ப‌டு அத‌ன் கீழேயே கூகுல் என்றால் தேடிய‌ந்திர‌ம் என்ற‌ அறிமுக‌மும் இட‌ம் பெறுகிற‌து. ப‌லவித அர்த்த‌ங்க‌ளில் ஒன்றாக‌ கூகுல் என‌ முடியும் பெய‌ர் கொண்ட‌வ‌ர்களும் ப‌ட்டிய‌லிட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.

இந்த அம‌ச‌த்திற்காக‌ நிச்ச‌ய‌ம் இத‌னை ப‌ய‌ன்ப‌டுத்தி பார்க்க‌லாம். இத‌னை த‌விர‌ தேட‌ல் ப‌க்க‌ம் கூகுலைவிட‌ தெளிவான‌தாக‌ சிக்க‌லில்லாம‌ல் இருப்ப‌தாக‌ கூற‌ப்ப‌ட்டுள்ள‌து. அதே போல‌ தேட‌ல் வ‌ர‌லாற்றை சேமித்து வைப்ப‌தில்லை என்றும் குறிப்ட‌ப்ப‌ட்டூள்ள‌து.

இந்த‌ அம்சங்கள் எல்லாவ‌ற்றையும் கூகுலோடு ஒப்பிட்டு பார்க்கும் வ‌ச‌தியும் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
எல்லாவ‌ற்றுக்கும் மேல் இத‌ முக‌ப்பு ப‌க்க‌ம் வ‌ண்ண‌ம‌ய‌மாக‌ வாத்து ம‌ற்றும் இத‌ர ஐகான்க‌ளோடு அழ‌காக‌வே இருக்கிற‌து. அதோடு கூகுலில் இருக்கும் அதிர்ஷ்ட‌ தேட‌ல் வ‌ச‌தியை போல‌ (ஐஅய்ம் பீலிங் ல‌க்கி) ஐய‌ம் பீலிங் ட‌க்கி என்னும் கூடுத‌ல் வ‌ச‌தியும் உண்டு.

Wednesday, June 9, 2010

பாதுகாப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி?

கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டில் நாம் நம் பாதுகாப்பிற்குப் பல இடங்களில் பாஸ்வேர்ட்களை அமைக்க வேண்டியுள்ளது. இதனை அமைக்கையில் பெரும்பாலும் நாம் நமக்குத் தெரிந்தவர்கள் பெயர், திருமண தேதி, ஊரின் பின்கோட் எண், பிறந்த நாள் போன்றவற்றைக் கலந்து அமைக்கிறோம். இந்த தகவல்கள் எல்லாம் உங்களைச் சுற்றியுள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குத் தெரிந்ததாயிற்றே. அவர்கள் ஒரு பாதியைத் தெரிந்து கொண்டாலே அடுத்த பாதியை அவர்களே அறிந்து கம்ப்யூட்டரில் மற்றும் இணையத்தில் உங்கள் கோட்டையில் நுழைந்துவிடுவார்களே.

இதாவது பரவாயில்லை; உங்கள் வங்கி அக்கவுண்ட்டிற்கான பாஸ்வேர்டை அறிந்து கொண்டால் உங்கள் பணமெல்லாம் மாயமாய்ப் போய்விடுமே. இதற்கு என்ன செய்யலாம்? பாதுகாப்பான பாஸ்வேர்டை அமைக்க வேண்டும்; அதனையும் அதி பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும். ஒரு சிலர் எத்தனை பாஸ்வேர்ட்களை மனதில் நினைவில் வைத்துக் கொள்வது என்று ஒரே பாஸ்வேர்டை அமைத்திருப்பார்கள். இது அதைக் காட்டிலும் மோசமானது. ஒன்றை அறிந்து கொண்டால் உங்களின் அத்தனை ரகசிய இடங்களும் அலிபாபா கண்ட குகையாகிவிடும். எனவே பாதுகாப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி என்றும் அதனை எப்படி பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி என்றும் இங்கு காணலாம்.

1. பாதுகாப்பான பாஸ்வேர்ட் என்பது எழுத்துக்களும் எண்களும் இணைந்த கோவையாக இருக்க வேண்டும். சொற்கள் அல்லது எண்கள் மட்டும் என்றால் ஒரு சிலரால் எளி-தாகக் கண்டுபிடிக்க முடியும். இரண்டும் கலந்தது என்றால் நிச்சயம் கண்டுபிடிக்க முடியாது. இதனால் தான் சில வங்கிகள் மற்றும் இணைய தளங்கள் பாஸ்வேர்டில் கட்டாயம் எழுத்துக்களும் எண்களும் இருக்க வேண்டும் என கண்டிஷன் போடுகின்றன.

2. ஒரு பாஸ்வேர்ட் குறைந்தது 8 கேரக்டர்களும் அதிக பட்ச அளவில் 12ம் கொண்டு அமைக்கப்பட வேண்டும். இதில் அமையும் எழுத்துக்களில் கேப்பிடல் மற்றும் சிறிய எழுத்துக்கள் இருக்கலாம். குறைந்தது ஏதேனும் ஒரு ஸ்பெஷல் கேரக்டர் இருக்கலாம் (*-%$#@). உங்களுடைய பெயர், பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டதாக இருக்கக் கூடாது. எனவே எடுத்துக்காட்டாக s64&lq67 என இருக்கலாம். இதில் 9 கேரக்டர்கள் உள்ளன. பெரிய மற்றும் சிறிய எழுத்துக்கள், எண்கள் மற்றும் ஸ்பெஷல் கேரக்டர்கள் உள்ளன. முதலில் இதனை நினைவில் வைத்துக் கொள்வது கடினமாக இருக்கும். ஆனால் போகப்போகச் சரியாகிவிடும். இதற்குப் பதிலாக brilliant போன்ற சொற்களை பாஸ்வேர்டாக வைத்துக் கொண்டால் எளிதாக யாரும் கண்டுபிடித்து விடுவார்கள்.

3. இன்னொரு கெட்ட பழக்கம் நம்மிடையே உண்டு. அது பாஸ்வேர்ட்களை எழுதி வைப்பது. எத்தனை நாட்களுக்கு எழுதி வைத்துள்ள ஏட்டினை பாதுகாப்பாக வைக்க முடியும். நீங்கள் இல்லாத போது இதனை யாரும் பார்த்துவிட்டால் எளிதாக மற்றவர்கள் பயன்படுத்தி விடுவார்களே! எனவே கூடுமானவரை எதிலும் எழுதிவைக்காமல் மனதிற்குள் வைத்துக் கொள்ளலாம்.

4. ஒரு சிலர் ஆண்டாண்டு காலமாய் பாஸ்வேர்டினைத் தங்கள் சொந்தப் பெயர் போல மாற்றாமல் வைத்திருப்பார்கள். இதுவும் தவறாகும். அடிக்கடி பாஸ்வேர்டினை மாற்ற வேண்டும். ஏனென்றால் பல இணைய தளங்கள் அனுப்பும் மால்வேர் போன்ற புரோகிராம்கள் இந்த பாஸ்வேர்டினை அறியும் வகையில் உருவாக்கப்படுகின்றன. அவையும் பாஸ்வேர்டினை அறிந்து அந்த புரோகிராமினை அனுப்பியவர்களுக்கு அனுப்பி வைக்கின்றன. இது போன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க பாஸ்வேர்டுகளை அடிக்கடி மாற்றுவது நல்லது.

Saturday, June 5, 2010

கணினித் துறையில் உள்ள அனைத்து வகையான புத்தகத்தையும் இலவசமாக தரவிரக்கலாம்.

கணினித் துறையில் உள்ள அனைத்து வகையான புத்தகங்களையும் ஆன்லைன் மூலம் இலவசமாக தரவிரக்கலாம். எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவு.

கணினி துறையில் எந்த மொழி படிக்க வேண்டும் என்றாலும் கடையில் சென்று புத்தகம் தேடவேண்டாம் அதே போல் பல இணையதளங்ககிற்கு சென்றும் தேட வேண்டாம். இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் அனைத்து வகையான புத்தகங்களையும் இலவசமாக தரவிரக்கிக்கொள்ளலாம்.

இணையதள முகவரி : http://www.ebookpdf.net/


இந்த தளத்திற்க்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியது போல் அங்கு இருக்கும் தேடுபொறியில் நமக்கு கணினியில் பிடித்த புத்தகத்தின் பெயரை கொடுத்து தேட வேண்டியது தான் சில நிமிடங்களில் நாம் தேடிய புத்தகத்தை எளிதாக காட்டும் உடனடியாக தரவிரக்கிக்கொள்லலாம். ஒவ்வொரு துறைவாரியாக பல தரப்பட்ட புத்தகங்கள் இங்கு உள்ளது. சில தினங்களுக்கு முன் வரை வெளியான அனைத்து புத்தகங்களையும் நாம் கட்டணம் ஏதும் இல்லாமல் இலவசமாக தரவிரக்கிக்கொள்ளலாம்.

Tuesday, May 25, 2010

ஆன்லைன் வங்கிக் கணக்கா? உஷார்!

வங்கிகளின் செயல்பாடுகள் இப்போது மிக மிக எளிதாக்கப்பட்டு மக்களுக்குக் கிடைக்கின்றன. 24 மணி நேரமும் பணம் எடுக்க ஏ.டி.எம். மையங்கள், வீடு தேடி நம் பெயர் அச்சடித்துக் கிடைக்கும் செக் புக், போன் செய்தால் டி.டி., எனப் பல புது வசதிகள் இப்போது அடிப்படை வசதிகளாய் அமைந்து விட்டன. இவற்றுக் கெல்லாம் சிகரமாய் நமக்குக் கிடைப்பது இன்டர்நெட் வழி ஆன்லைன் பேங்கிங் வசதியாகும். இதன் மூலம் நம் கணக்கினைக் கண்காணிக்கலாம்; நிதியை ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்கிற்கு மாற்றலாம். பில்களைச் செலுத்தலாம். டிக்கட் எடுக்கலாம், என வசதிகள் நீண்டு கொண்டே போகின்றன. ஆனால் நம் பேங்க் அக்கவுண்ட் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் திருட்டுத்தனமாகப் பெற்று, அவற்றைப் பயன்படுத்தி நம் கணக்கிலிருந்து பணம் திருடும் கும்பல்களும் அதிகரித்து வருகின்றன.

இவை பிரபலமான வங்கிகளின் இணைய தளம் போலவே தளங்களைத் தயார் செய்து, நம்மை ஏமாற்றி அதில் நம் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் என்டர் செய்திட வழி தந்து அவற்றைப் பெற்றுவிடுகின்றனர். பின் அவற்றைப் பயன்படுத்தி பணத்தை எளிதாகத் திருடுகின்றனர். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கணக்குகளில் இந்த திருட்டு அதிகம் நடப்பதாகத் தெரிகிறது. எனவே வாடிக்கையாளர்கள் கீழ்க்காணும் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இவை வலியுறுத்தி வருகின்றன. அவற்றை இங்கு காணலாம்.

1. முதலாவதாக இந்த வங்கிகளிலிருந்து உங்கள் இமெயிலுக்கு ஏதேனும் இமெயில் மெசேஜ் வந்தால் அவற்றைத் திறக்கவோ, அல்லது திறந்த பின்னர் அதில் காணப்படும் லிங்க்குகளில் கிளிக் செய்திடவோ வேண்டாம். இது போன்ற மெயில்களை இந்த பேங்குகள் அனுப்புவதில்லை.

2. இந்த வங்கிகளின் தளங்களை அணுகிய உடனேயே அதன் முகவரியைப் பார்க்கவும். அதில் https என்ற எழுத்துக்களில் முதல் முகவரி சொல் இருக்க வேண்டும். இதில் s என்பது செக்யூரிட்டி என்பதனைச் சுருக்கமாகச் சொல்லிப், பாதுகாப்பான தளம் என்பதைக் குறிக்கிறது. இந்த s இல்லை என்றால் அது போலி. எனவே உடனே வெளியேறவும்.

3. பூட்டு மாட்டும் பேட்லாக் சிறிய படம் ஒன்று இந்த தளத்தின் அதே முகப்புப் பக்கத்தில் எங்கேணும் இருக்கும். இது பெரும்பாலும் அட்ரஸ் பாரின் ஓரத்தில் அல்லது கீழாக ஒரு இடத்தில் இருக்கும். இதன் மீது கிளிக் செய்தால், இந்த தளம் குறித்த பாதுகாப்பு சர்டிபிகேட் கிடைக்கும். இந்த தளம் பாதுகாப்பானது என்பதற்கான அத்தாட்சி இதுவாகும்.

4. அட்ரஸ் பாரின் முகவரிக்கு முன்னால் உள்ள பாகம் பச்சை நிறமாக இருக்கிறதா என்பதனைக் கவனிக்கவும். இதுவும் இந்த தளம் பாதுகாப்பானது என்பதைக் குறிக்கிறது.

5. மேலும் இந்த தளங்களில் லாக் இன் செய்வதற்கான கட்டங்கள் தரப்பட்டிருக்கும். ஏதேனும் பாப் அப் விண்டோ கொடுத்து, யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கேட்டால் தர வேண்டாம். தளத்தைவிட்டு வெளியேறவும்.


இவை எல்லாம் சோதனை செய்த பின்னரே லாக் இன் செய்திடவும். பல தளங்களில் இதற்கென விர்ச்சுவல் கீ போர்ட் தரப்பட்டிருக்கும். இதனைப் பயன்படுத்துவது சற்று கூடுதல் நேரம் எடுக்கும் என்றாலும், நல்லதும் பாதுகாப்பானதும் ஆகும். ஏனென்றால் ஒவ்வொரு முறை இதனைத் திறக்கும் போதும் விர்ச்சுவல் கீ போர்டில் கீகள் இடம் மாறி இருக்கும். எனவே நாம் கிளிக் செய்திடும் இடத்தை வைத்து நம் பெர்சனல் தகவல்களைப் பெற முடியாது. சில வேளைகளில் தொலைபேசி வழியாகவும், வங்கிகளில் இருந்து பேசுவது போல பேசி நம் அக்கவுண்ட் பற்றிய பெர்சனல் தகவல்களைப் பெற முயற்சிப்பார்கள். அது போல எந்த வங்கியும் தகவல்களைப் பெறமாட்டார்கள். எனவே அவற்றைத் தவிர்த்துவிடவும்.

Tuesday, May 4, 2010

"மவுஸ்" மாயாஜாலம்

கையடக்க மவுஸ் எவ்வளவு வேலை செய்கிறது பார்த்தாயா! என்று அடிக்கடி வியப்பவரா நீங்கள். இதோ இந்த மவுஸ் செய்திடும் இன்னும் பல வேலைகளை இங்கே படியுங்கள். மவுஸின் மாயாஜாலம் மட்டுமல்ல, உங்களின் வேலையைக் குறைக்கும் வகையில் மவுஸ் என்ன வகை திறனெல்லாம் கொண்டுள்ளது என்று இங்கு பார்க்கலாம். உங்களிடம் ஸ்குரோல் வீல் உள்ள மவுஸ் இருக்கிறதா; அப்படியானால் பல ட்ரிக்குகளை நீங்கள் மேற் கொள்ளலாம்.


இணையப் பக்கம் ஒன்றை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு வீலை மெதுவாகச் சுழற்றவும். நீங்கள் சுழற்றும் திசைக் கேற்ப முன்பு பார்த்த இணையப் பக்கங்களுக்கு நீங்கள் எடுத்துச் செல்லப் படுவீர்கள். இதனைச் சோதிக்க இன்டர் நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பைத் திறக்கவும். அதன் வழியாக பல இணைய பக்கங்களுக்குச் செல்லுங்கள். பின் இந்த ட்ரிக்கைச் சோதித்துப் பார்த்தால் இதன் பொருள் விளங்கும்.


ஏதேனும் ஒரு வெப் பிரவுசர் வழியாக இணையப் பக்கங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? கண்ட்ரோல் கீயை அழுத்தி கொண்டு ஸ்குரோல் வீலைச் சுழற்றவும். சுழற்றும் திசைக்கேற்ப வெப் சைட்டின் எழுத்துக்கள் சிறியதாகவோ பெரியதாகவோ மாறுவதைப் பார்க்கலாம். நீங்கள் ஆப்பரா பிரவுசர் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த ட்ரிக் மேற்கொள்கையில் படங்களும் பெரிது சிறிதாவதைப் பார்க்கலாம்.

பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பரா பிரவுசர்களைப் பயன்படுத்துகையில் இணையப் பக்கங்களில் உள்ள ஹைப்பர் லிங்க்குகளின் மீது மவுஸ் கர்சரைக் கொண்டு கிளிக் செய்தால் லிங்க்குடன் சம்பந்தப்பட்ட தளம் புதிய டேப்பில் திறக்கப்படும். அதே போல ஒரு டேப் மீது மவுஸ் வீல் கொண்டு கிளிக் செய்தால் அந்த டேப் மூடப்படுவதுடன் அது நம் பார்வையிலிருந்து அகற்றப்படும். டேப் ஓரமாக உள்ள சிறிய பெருக்கல் அடையாளத்தின் மீத்து கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்வதைக் காட்டிலும் இது எளிதல்லவா!

மவுஸ் வீலைப் பயன்படுத்தி இணைய தளப் பக்கங்களில் முன்னும் பின்னும் செல்ல முடியும். பயர்பாக்ஸ் பிரவுசரில் நிறைய டேப்கள் திறந்திருக்கையில் டேப் பாரின் இரு முனைகளிலும் ஒரு அம்புக் குறி அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதில் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால் மறைந்திருக்கும் பிற டேப்களைக் காணலாம். இதைக் காட்டிலும் ஓர் எளிய வழி உள்ளது. டேப் பாரில் எங்கு வேண்டுமென்றாலும் உங்கள் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று வைத்து உங்கள் மவுஸ் வீலை மேலும் கீழுமாக நகர்த்தவும். மறைந்துள்ள டேப்கள் காட்டப்படும்.

உங்கள் மவுஸ் பாய்ண்டர் ஸ்கிரீனில் எங்கிருக்கிறது என்று கண்டு பிடிப்பது கஷ்டமாக இருக்கிறதா? மவுஸ் பாய்ண்டர் ஸ்கீமைத் திறந்து பாய்ண்டரைப் பெரிதாகவோ அல்லது வேறு வடிவிலோ மாற்றிக் கொள்ளலாம். இதற்கு Start /Settings/Control Panel /Mouse எனச் செல்லவும்.
இங்கு Pointers டேபில் கிளிக் செய்திடவும். மேல் பிரிவில் புதிய பாய்ண்டர் ஒன்றை கீழ் விரியும் மெனுவில் இருந்து தேர்ந்தெடுக்கவும். அதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். உங்களுடைய கம்ப்யூட்டரில் இது போன்ற வேறு மவுஸ் பாய்ண்டர் ஸ்கீம் கிடைக்கவில்லை என்றால் http://support.microsoft.com/default.aspx?scid=kb;ENUS;q154500 என்ற தளத்திற்குச் செல்லவும். இந்த தளத்திலிருந்து எட்டு வெவ்வேறு மவுஸ் பாய்ண்டருக்கான திட்டத்தினை டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

கிளிக் லாக் என்றொரு அருமையான வசதியை விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் எம்.இ. ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் காணலாம். இதன் விசேஷம் என்ன? பொதுவாக டெக்ஸ்ட் ஒன்றை செலக்ட் செய்திட அதன் தொடக்க இடத்தில் கர்சரை அழுத்திப் பிடித்துக் கொண்டு பின் அழுத்தியவாறே அப்படியே தேர்ந் தெடுக்கபட வேண்டிய இடம் வரை இழுத்து வந்து முடியும் இடத்தில் விட்டுவிடுவோம். டெக்ஸ்ட் செலக்ட் ஆகிவிடும்.

கிளிக் லாக் வசதியை இயக்கிவிட்டால் இது போல அழுத்திப் பிடித்துக் கொண்டே இழுக்கும் வேலை இல்லை. டெக்ஸ்ட்டின் தொடக்கத்தில் ஒரு கிளிக்; முடிவில் ஒரு கிளிக். காரியம் முடிந்தது. டெக்ஸ்ட் செலக்ட் ஆகிவிட்டது. இந்த இரண்டிற்கும் இடையே உள்ள நேரத்தையும் நீங்கள் கிளிக் லாக் மூலம் செட் செய்திடலாம்.

இதை எங்கிருந்து பெறுவது? என்று தேட வேண்டாம். உங்கள் சிஸ்டத்திலேயே உள்ளது. Settings/Control Panel/Mouse செல்லவும். பின் Button டேப் கிளிக் செய்திடவும். கீழாக உள்ள "Turn on Click Lock" என்ற பாக்ஸில் டிக் செய்திடவும். மீண்டும் கிளிக் செய்து அழுத்தியவாறே பழையபடி வேண்டும் என்றால் Settings பட்டன் அழுத்தவும்.

அடோப் போட்டோ ஷாப் அப்ளிகேஷன் புரோகிராமில் ஒன்றை ஸூம் செய்திட என்ன செய்கிறீர்கள்? டூல் பாரிலிருந்து ஸூம் டூலைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகிறீர்கள். அல்லது கண்ட்ரோல் + ஸ்பேஸ் பார் ஸூம் செய்திட உங்களுக்குக் கை கொடுக்கிறது. ஆல்ட் + ஸ்பேஸ் பார் அழுத்தினால் ஸூம் குறைகிறது. இவற்றை எல்லாம் மறந்திடுங்க! படத்தின் மீது கர்சரைக் கொண்டு சென்று ஆல்ட் கீ அழுத்திக் கொண்டு ஜஸ்ட் ஸ்குரோல் வீலைப் பயன்படுத்துங்க.

வெப் பிரவுசிங் செய்திடுகையில் பயர்பாக்ஸ் பிரவுசரில் தேவையற்ற டேப் ஒன்று திறக்கப்படுகிறதா? அதன் உள்ளே என்ன உள்ளது என்று பார்க்கக் கூட உங்களுக்கு விருப்பம் இல்லையா? தேவையற்ற டேப் மீது உங்கள் மவுஸ் கர்சரைக் கொண்டு செல்லவும். இப்போது மவுஸின் ஸ்குரோல் வீலைப் பயன்படுத்தி ஒரு கிளிக் செய்திடுங்கள். டேப் அதனுடன் இணைந்த தளம் எல்லாம் காணாமலே போயிருக்கும்.

இணையதளத்தில் உள்ள டெக்ஸ்ட்டை ஒவ்வொரு வரியாகப் பொறுமையாகப் படிப்பவரா நீங்கள்! உங்களுக்கு உதவ மவுஸ் தயாராக உள்ளது. ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு மவுஸ் ஸ்குரோல் வீலை நகர்த்துங்கள். ஒவ்வொரு வரியாகத் தள்ளப்படும். பயர்பாக்ஸில் பல புக்மார்க்குகளை ஏற்படுத்தி விட்டீர்கள். உங்கள் புக் மார்க்குகள் எல்லாம் நான்கு அல்லது ஐந்து வகைப் பட்ட பொருள் குறித்தவையாக உள்ளன. எடுத்துக் காட்டாக கம்ப்யூட்டர் டிப்ஸ் குறித்த தளங்களுக்கான புக்மார்க்குகள், ஆன் லைனில் பத்திரிக்கைகளைப் படிப்பதற்காக சில புக்மார்க்குகள், ஹார்ட் அட்டாக் வராமல் இருப்பதற்கான தளங்களுக்கானவை எனப் பல உள்ளன.

இவற்றை ஒவ்வொரு வகைக்கான போல்டர்களை உருவாக்கி அந்த போல்டர்களுக்குள் இவற்றை வகைப்படுத்தி போட்டு வைத்தால் புக் மார்க்குகளின் நீண்ட பட்டியலில் ஒவ்வொன்றாகத் தேடித் தேடி திறக்க வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட போல்டர்களைத் திறந்து தேவையான புக் மார்க்குகளின் மீது கிளிக் செய்து திறந்து படிக்கலாம். சரி, போல்டர் ஒன்றில் ஒன்றுக்கொன்று சார்ந்த தளங்களின் பெயர்கள் தானே இருக்கப் போகின்றன. எப்படியும் அனைத்தையும் பார்க்க வேண்டும்.

மொத்தமாக இவற்றைத் திறக்க முடியுமா? முடியும் என்கிறது பயர்பாக்ஸ். சம்பந்தப்பட்ட போல்டர் மீது மவுஸ் ஸ்குரோல் வீல் கொண்டு கிளிக் செய்தால் அந்த போல்டரில் உள்ள அனைத்து புக்மார்க்குகளுக்கான அனைத்து இணைய தளங்களும் திறக்கப்படும்.

Tuesday, April 6, 2010

வரவேற்கும் அபாயங்கள்

அபாயங்கள் நம்மை வரவேற்கின்றனவா? அல்லது நாம் அபாயங்களை வரவேற்கிறோமா! என்ற கேள்வி இந்த தலைப்பைப் படித்தவுடன் நம் மனதில் எழும். கம்ப்யூட்டர் பயன்பாட்டினைப் பொறுத்தவரை இரண்டும் தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நம் வாழ்வோடு இரண்டறக் கலந்த கம்ப்யூட்டர் தரும் அபாயங்கள் குறித்து, அறிந்து அதற்கான தற்காப்பு வழிகளை நாம் மேற்கொண்டிருந்தாலும், சில அபாயங்களை நாம் அறியாமலேயே நாம் வரவேற்று மாட்டிக் கொள்கிறோம். கிராமப் புறங்களில் வேலியில் போகும் ஓணான் என்று ஒரு பழமொழி தொடங்கும். அந்த வகையில் தான் நாம் நம்மை அறியாமலேயே கம்ப்யூட்டரில் பல அபாயங்களை வரவழைத்துக் கொள்கிறோம். அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

1. அடோப் பலவீனங்கள்: மைக்ரோசாப்ட் புரோகிராம்களுக்கு அடுத்தபடியாக, ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் அடோப் நிறுவன அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவது உறுதி. பிளாஷ் (Flash) அக்ரோபட் ரீடர் (Acrobat Reader) அல்லது ஷாக்வேவ் (Shock Wave) என ஏதாவது ஒன்றினை நாம் இன்ஸ்டால் செய்து வைத்திருக்கிறோம். கம்ப்யூட்டரைக் கெடுக்கும் மால்வேர் தொகுப்புகளால் இவை எளிதாகப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில் பழைய பதிப்புகளை நீங்கள் பயன்படுத்திவந்தால், அவற்றில் உள்ள பலவீனமான இடங்களைப் பயன்படுத்தி மால்வேர் புரோகிராம்கள் நுழைவது எளிது என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் அப்டேட் செய்யப்பட்ட பதிப்புகளில் தான் இந்த பலவீனமான இடங்கள் சரி செய்யப்பட்டு இருக்கும். பழைய பதிப்புகள் எனில் அவை மால்வேர் புரோகிராம்கள் எளிதாக நுழைய இடம் தருவதாக அமையும். இதில் இன்னொரு வகை பிரச்னை என்னவென்றால், இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், உங்கள் அடோப் பிளாஷ் பிளேயர் பழையதாக உள்ளது. அப்டேட் செய்திட இங்கே கிளிக் செய்திடுங்கள் என்று ஒரு செய்தி வரும். கிளிக் செய்தால், கம்ப்யூட்டர் முடங்கிப் போய்விடும். (என் சொந்த அனுபவம் இது). அல்லது பிரச்னை இருப்பதாகவும், அது குறித்த விளக்கத்தினையும், தீர்வையும் இந்த பைலில் பார்க்கலாம் என்று ஒரு பி.டி.எப். பைலுக்கான லிங்க் தரப்படும். கிளிக் செய்தால் அவ்வளவுதான். மீண்டும் ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்திடும் அளவிற்குக் கொண்டு செல்லும். இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம்? அடோப் தொகுப்புகள் மேம்படுத்தப்பட்டு கிடைப்பதாக இருந்தால், அடோப் நிறுவனத்தின் தளம் சென்று அந்த முயற்சியில் ஈடுபடுங்கள். வேறு தளங்கள் தரும், குறிப்பாக பாப் அப் விண்டோக்கள் தரும் லிங்க் மூலம் செல்ல வேண்டாம். அடோப் தளத்தைப் பார்த்து அவ்வப்போது அப்டேட் செய்திடுங்கள்.

2. பயர்பாக்ஸ் ஆட் ஆன்: பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஆட் ஆன் தொகுப்பு புரோகிராம்கள் அபாயத்திற்கான அழகான திறவுகோல்களாகும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் ஆக்டிவ் எக்ஸ் ப்ளக் இன் போல மோசமானது இல்லை என்றாலும், ஆபத்தை விளைவிப்பதில் இவையும் சளைத்தவை இல்லை. பல மால்வேர் புரோகிராம்கள், பயர்பாக்ஸ் பிரவுசரின் முதன்மை செயல்பாட்டில் சென்று வழி தேடாமல், ஆட் ஆன் தொகுப்புகளைத்தான் பார்த்து நுழைகின்றன. பிளாஷ் பிளேயர், ஆன்லைன் மியூசிக் பிளேயர் என ஏதாவது ஒன்றுக்கான ஆட் ஆன் என்ற செய்தியுடன் இவை உங்களது கவனத்தை ஈர்க்கும். சரி எனக் கிளிக் செய்தால் மாட்டிக் கொள்வோம். இத்தகைய தாக்குதல்களிலிருந்து தப்புவது சிரமம் தான். ஏனென்றால் ஆயிரக்கணக்கான ஆட் ஆன் தொகுப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. இவை தரும் வசதிகளும் பிரமாதமாய் இருக்கின்றன. முதலில் பயன்படுத்துகையில் இவை எந்த தீங்கும் விளைவிக்காமல் தான் இருக்கின்றன. பின் இவற்றைக் கண்காணித்து மால்வேர் புரோகிராம்கள், இவற்றைப் பயன்படுத்தி நுழைகின்றன. இவற்றிலிருந்து தப்பிக்க பயர்பாக்ஸ் பிரவுசரை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடாமல், ஏதேனும் பிளாஷ் டிரைவ் மூலம் போர்ட்டபிள் பிரவுசரைப் பயன்படுத்தலாம்.

3. மேக் சிஸ்டம்: பலர் இது போன்ற வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகள் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நுழையாது என்று எண்ணுகின்றனர். இது ஒரு காலத்தில் உண்மையாக இருந்தது. ஏனென்றால் இதனைப் பயன்படுத்துபவர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால், வைரஸ்களைப் பரப்புபவர்கள் மேக் பக்கம் கவனத்தைச் செலுத்தவில்லை. இப்போது நிலை மாறிவிட்டது. மேக் சிஸ்டம் வழியாகவும் மால்வேர்கள் பரவத் தொடங்கிவிட்டன. இந்த சிஸ்டத்திலும், பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்களை அவ்வப்போது அப்டேட் செய்திட்டால், மால்வேர்கள் நுழைவது தடுக்கப்படலாம்.

4. ஆப்பிள் சாதனங்கள்: விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் நாம் ஆப்பிள் நிறுவன சாதனங்களைப் (சாப்ட்வேர்கள்) பயன்படுத்தி வருகிறோம் என்பதை மறந்துவிடுகிறோம். இவற்றையும் மற்ற அப்ளிகேஷன்கள் போலவே நாம் கண்காணிக்க வேண்டும். பல கம்ப்யூட்டர்களில் குயிக் டைம் மற்றும் ஐ ட்யூன்ஸ் ஆகிய ஆப்பிள் நிறுவன சாப்ட்வேர்கள் இடம் பெறுகின்றன. இவற்றில் குயிக் டைம் சாப்ட்வேர் தொகுப்பைப் பயன்படுத்தி பல வைரஸ்கள் பரவியது நிரூபிக்கப்பட்டுள்ளது. 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் இது அதிகம் இருந்தது. இதனை உணர்ந்த ஆப்பிள் நிறுவனம் அவ்வப்போது இதற்கான தடுப்பு அப்டேட் பைல்களைத் தானாகவே அனுப்பி சரி செய்தது. எனவே அப்டேட் செய்வதுதான் இங்கும் பாதுகாப்பு வழியாகும்.

5. குழப்பும் யு.ஆர்.எல்.கள்: மிகப் பெரிய நீளமான இணைய தள முகவரிகளைச் சுருக்கி தரும் லிங்க்குகள் வழியாக மால்வேர்கள் நுழைவது தற்சமயம் அதிகரித்து வருகிறது. சுருக்கமாகத் தரப்பட்டுள்ள யு.ஆர்.எல். முகவரிகள், எதனைக் குறிக்கின்றன என்று அறியாமலேயே, நாம் அவற்றின் மீது கிளிக் செய்து மாட்டிக் கொள்கிறோம். இதிலிருந்து தப்பிக்க ஒரு தளம் உதவுகிறது. இதன் முகவரி http://longurl.org/ இந்த தளத்தில் நாம் எந்த ஒரு சுருக்கப்பட்ட இணைய முகவரியையும் தந்து, அது தீங்கு விளைவிக்கக் கூடியதா என அறிந்து கொள்ளலாம்.

6. டி.என்.எஸ். ஹைஜாக்: எண்களில் அமைந்துள்ள முகவரிகளை, நாம் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சொற்களில் அமைக்கும் பணியினை டி.என்.எஸ். சர்வர்கள் மேற்கொள்கின்றன. இந்த மாற்றத்தில் ஈடுபடுகையில் ஏதேனும் ஒரு மால்வேர் புரோகிராம், டி.என்.எஸ். சர்வர் தர இருப்பதனை ஹைஜாக் செய்து, தன்னுடைய மோசமான லிங்க்கைத் தரும் வேலை தற்போது நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து தப்ப நாம் எந்த முயற்சியும் எடுக்க முடியாது. டி.என்.எஸ். சர்வர்களை இயக்குபவர்கள் தான் மேற்கொள்ள வேண்டும்.

மேலே சொன்னவை நாம் பயன்படுத்தியே ஆக வேண்டிய கம்ப்யூட்டர் சாதனங்கள் தரும் தீய விளைவுகளாகும். இவற்றைப் பயன்படுத்தாமல் இருக்கவும் முடியாது. எனவே கூடுதல் கண்காணிப்பும், மேலே பரிந்துரைக்கும் வழிகளுமே பாதுகாக்கும் கவசங்களாக இருக்கும்.

Monday, April 5, 2010

மெமரி காலியாகிறதா?


கம்ப்யூட்டர் பயன்பாட்டில் அதன் மெமரி எந்த அளவிற்கு காலியாகிறது என்பதைப் பொறுத்தே அதன் வேகம் அமையும். அதிகமான இடத்தைப் பிடிக்கும் புரோகிராம்களை இயக்க நிலையில் வைத்திருந்தால், அடுத்து அடுத்து நாம் இயக்க எடுக்கும் புரோகிராம்களுக்கு இடம் இல்லாமல், கம்ப்யூட்டர் திணற ஆரம்பிக்கும். அல்லது திடீரென கிராஷ் ஆகி நிற்கும். இந்த பிரச்னையை எதிர்கொள்ளாமல் இருக்க வேண்டுமானால், நம் கம்ப்யூட்டரின் மெமரி எந்த அளவில் பயன்பட்டு வருகிறது என்பதை அறிவது நல்லது. இதனை அறிய பல புரோகிராம்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. சிஸ் ட்ரே மீட்டர் (SysTray Meter): இதனை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. இது ஒரு சிறிய டூல். இதனை இயக்கினால், இந்த டூல் சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொண்டு, நம் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் மெமரியின் அளவைக் கண்காணித்துக் கொண்டு இருக்கும். அத்துடன் சி.பி.யு.வின் பயன்பாட்டி னையும் பார்த்து நமக்குக் காட்டிக் கொண்டு இருக்கும். வண்ணங்களில் காட்டுவதால் மெமரி பயன்பாட்டினைத் தெளிவாக அறிய முடியும். இந்த டூல் பெற http://88.191.26.34/computers_are_ fun/index. php/systraymeter/ என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும். இந்த டூல் பைல் அளவு 15 கேபி.

2. மெம் இன்போ (Mem Info): இந்த புரோகிராமினை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இன்ஸ்டால் செய்த பின்னர், இது கம்ப்யூட்டரின் மெமரி பயன்பாட்டினைத் தொடர்ந்து அளந்து கொண்டிருக்கும். மிக அதிகமாக, நெருக்கடியான நிலையை மெமரி பயன்பாடு அடையப் போகிறது என்றால், உடனே எச்சரிக்கையினை வழங்கும். சிஸ்டம் ட்ரேயில் இது அமர்ந்து கொள்ளும். மெமரி டிபிராக் செய்திடவும் இதனைப் பயன்படுத்தலாம். முதலில் சொல்லப்பட்ட சிஸ் ட்ரே மீட்டர் போல இது செயல்பட்டாலும், சில கூடுதல் வசதிகளையும் இந்த டூல் கொண்டுள்ளது. வண்ணம் பூசி முடிவுகளைக் காட்டும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி: http://www.carthagosoft.net/meminfo.htm

3. பெர்பார்மன்ஸ் மானிட்டர் (Performance Monitor): இந்த டூல் மெமரி பயன்பாட்டினைக் கண்டறிவதுடன், டிஸ்க் மற்றும் நெட்வொர்க் பயன்பாட்டினையும் கண்காணிக்கிறது. உங்கள் திரையின் மேலாக ராம், டிஸ்க் மற்றும் நெட்வொர்க் பயன்பாட்டிற்கான கிராப் ஒன்றைக் காட்டிக் கொண்டே இருக்கும். இதனைப் பெற http://www.hexagora.com/en_dw_davperf.asp என்ற முகவரிக்குச் செல்லவும். தற்போது இதன் பதிப்பு 3.9 பல வசதிகளுடன் இலவசமாகவே கிடைக்கிறது.

4. ப்ரீ ராம் எக்ஸ்பி ப்ரோ (FreeRAM XP Pro): இது சற்று கூடுதலான திறன் கொண்ட புரோகிராம். மெமரி மானிட்டருக்கும் மேலாகப் பல வேலைகளை மேற்கொள்ளக் கூடியது. ராம் மெமரியின் வேகத்தைக் கண்காணித்து அதனைத் திறம்பட நிர்வகிக்கும் திறன் கொண்டது – இது மெமரியைத் தானாகவே விடுவிக்கும், அளவெடுக்கும், நமக்கு ரிப்போர்ட் தரும், மெமரி கம்ப்ரஸ் செய்து காட்டும். இதனைப் பெற http://www.yourwaresolutions.com/software. html#framxpro என்ற முகவரி செல்லவும். ஸிப் பைலாக 606 கேபி அளவில் இந்த பைல் கிடைக்கும். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7ல் இது செயல்படுமா எனத் தெரியவில்லை.

Thursday, April 1, 2010

தேவையற்ற வலைப்பக்கங்களை Block செய்ய

கணினி பயனாளர்கள் பலரது கணினிகள், அவர்கள் மட்டுமின்றி, அவர்களை சார்ந்தவர்களாலும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணமாக வீட்டில் உபயோகிக்கும் கணினி, மற்றும் அலுவலகங்கள், கல்வி கூடங்கள் போன்றவற்றில் இணைய இணைப்பு இருப்பின், அவை தவறான உபயோகத்திற்கு பயன்படுத்தப் படுவது நாம் அறிந்தாலும் அதை தடுக்க இயலாமல் உள்ளது.

உதாரணமாக வீட்டில் சிறுவர்கள் / மாணவர்கள் எந்நேரமும் ஆர்குட், யூடியுப் ஃ பேஸ்புக் என படிப்பில் கவனம் செலுத்தாமல் மூழ்கி கிடப்பது. இது போன்ற தளங்கள் மற்றும் வலைப்பக்கங்களை நமது கணினியில் Block செய்ய வேண்டுமெனில், அதற்கான மென்பொருட்கள் (காசு கொடுத்து வாங்கோணும்) சந்தையில் நிறைய உள்ளன. ஆனால் எந்த ஒரு மென்பொருளையும் உபயோகிக்காமல் இது போன்ற தளங்களை விண்டோஸ் XP யில் Block செய்வது எப்படி என பார்க்கலாம்.

My Computer ல் விண்டோஸ் XP இயங்குதளம் உள்ள ட்ரைவிற்கு சென்று அங்கு \Windows\System32\Drivers\etc என்ற கோப்புறைக்குள் சென்று அங்குள்ள hosts என்ற கோப்பை Notepad ல் திறந்து கொள்ளுங்கள்.

அந்த கோப்பின் கடைசி வரிக்கு சென்று அங்குள்ள 127.0.0.1 localhost என்ற வரிக்கு அடுத்த வரியில் 127.0.0.2 http://www.youtube.com/ எனவும், மற்றொரு தளத்தை Block செய்ய 127.0.0.3 http://www.sitename.com/ (உங்களுக்கு வேண்டியபடி) டைப் செய்து host கோப்பை சேமித்து. மூடி விடவும்.

கணினியை ஒருமுறை ரீஸ்டார்ட் செய்து விட்டால் போதும். இனி அந்த குறிப்பிட்ட தளங்கள் உங்கள் கணினியில் திறக்காது.