
Saturday, July 31, 2010
காதல் இனிமையானது

Thursday, July 15, 2010
Herbal Skin Care Tips
Friday, June 25, 2010
ஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்

1. நாங்கதான் உங்களுக்கு ரீ-சார்ஜ் பண்ணி அனுப்புறோம். ஆனாலும் நீங்க எதுக்கு மிஸ்டு கால் கொடுத்தே எங்க உயிரை வாங்குறீங்க? உங்ககிட்ட ஃபோன்ல பேசின காசையெல்லாம் சேர்த்து வெச்சிருந்தா, நான் லோன் போட்டு பைக் வாங்கி இருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது.
2. ஒரு பொண்ணு கொடுக்குற மிஸ்டு காலை மட்டும் யாராலும் அட்டெண்ட் பண்ணவே முடியாது. அவ்ளோ ஷார்ப்பா கட் பண்ணுவாங்க. இப்படி மிஸ்டுகால் கொடுக்க நீங்க எந்த யுனிவர்சிட்டியில ட்ரெயினிங் எடுத்துகிட்டிங்க?
3. அது ஏன் எப்போ பார்த்தாலும், எது கேட்டாலும் ஹி.. ஹி'ன்னு சிரிச்சுகிட்டே இருக்கீங்க? ஒரு மணி நேரம் உங்ககிட்ட ஃபோன்ல பேசினா அதுல நாற்பது நிமிஷம் கேனத்தனமா சிரிச்சுகிட்டேதான் இருக்கீங்க. ஏன் நீங்க ஏதாவது பேஸ்ட் விளம்பரத்துல நடிக்கிறதுக்கு எங்ககிட்ட ட்ரெயினிங் எடுக்கிறீங்களா?
4. ஃபோன்ல நாங்களேதான் பேசிகிட்டு இருக்கோம். எதைக்கேட்டாலும் "நீங்க சொல்லுங்க, நீங்க சொல்லுங்க'ன்னா" நாங்க என்னத்தை சொல்லி தொலைக்குறது? உங்களுக்கு எதையுமே பேச தெரியாது போலன்னு நினைச்சு நாங்க பாட்டுக்கு எதையாவது சொல்லி தொலைச்சுடுவோம். அதையே மனசுல வெச்சுகிட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கி கட்டிக்கிறது எங்களுக்கு மட்டும்தான் தெரியும். அது எப்படி பேசவே தெரியாத மாதிரி சீன் போடுறீங்க?
5. மெசேஜ்'ல மட்டும் ரொம்ப ரொமாண்டிக்கா SMS அனுப்பி எங்க தூக்கத்தை கெடுக்குறீங்க. ஆனா அதையே நேர்ல சொல்ல சொன்னா மட்டும் வெட்கத்தையே என்னமோ நீங்கதான் குத்தகைக்கு எடுத்த மாதிரி வெட்கப்படுறீங்க? இது எப்படி உங்களால மட்டும் முடியுது? மெசேஜ் அனுப்பும் போதெல்லாம் உங்க வெட்கத்தை என்ன ஃப்ரிட்ஜ்'க்கு உள்ளே ஒளிச்சி வெச்சிடுவீங்களா?
6. ஹேய்... உனக்கு எப்படி அது தெரியும்? அப்படிங்கிற கேள்வியை மட்டும் கேட்டுட்டா போதும். உடனே "நான் உங்க இதயத்துல தானே இருக்கேன். இது கூட எனக்கு தெரியாதான்னு" உடனே ஒரு டயலாக் விடுவீங்க. இந்த மாதிரி எல்லாம் டயலாக் விட டைரக்டர் கதிர்கிட்ட கத்துகிட்டீங்களா என்ன?
7. Loss of Pay' ல லீவு போட்டுட்டு, உங்களை பைக்ல தியேட்டருக்கு கூட்டிட்டு போனா, அப்பத்தான் ரொம்ப கவனமா ஹேண்ட் பேகை எடுத்து நம்ம ரெண்டு பேருக்கு நடுவுல வெச்சுகிட்டு வருவீங்க. என்ன கொடுமை சார் இதெல்லாம்?
8. அப்புறம் அப்புறம்'ங்கிற மொக்கையவே அரை மணி நேரமா போடுறீங்க. சரி வெச்சுடுறேன்னு நாங்க ஃபோனை கட் பண்ண போகும்போதுதான் "என் கூட பேசறது உங்களுக்கு போரடிக்குதா"ன்னு ஒரு சென்டிமென்ட் சீன் ஓபன் பண்ண வேண்டியது. உங்களுக்கு ஏன் இந்த கொலைவெறி?
9. நீங்க கிஃப்ட் கொடுத்தா மட்டும் விலையைப் பார்க்க கூடாது. அதுல உங்க அன்பைத்தான் பார்க்கணும். ஏன்னா நிச்சயமா அந்த கிஃப்ட் கீ-செயினாவோ, கர்ச்சீஃபாவோ, இல்லை அதிகபட்சமா மணிபர்ஸாவோதான் இருக்கும். ஏன்னா அதுங்கதான் ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கும். ஆனா இதே நாங்க கிஃப்ட் கொடுக்கும் போது மட்டும் சுடிதாரோ, செல்ஃபோனோ, தங்க செயினோ, வெள்ளி கொலுசோ, குறைஞ்சது 3,000/- ரூபாய்க்கு செலவு பண்ணாதான் நாங்க உங்க மேல உண்மையான அன்பு வெச்சிருக்கிறதா அர்த்தம். என்ன கரெக்ட்டா? உங்க அன்போட அளவுகோலுக்கு எல்லையே கிடையாதா?
10. "உன் நியாபகமாவே இருந்துச்சு. ராத்திரி எல்லாம் தூக்கமே வரலை"ன்னு மனசாட்சி இல்லாம பொய் சொல்றீங்களே.. என் நியாபகமாவே இருந்துச்சினா என் கூட பேச வேண்டியது தானே. இந்தக் கேள்வியை நாங்க கேட்டுடக் கூடாதுனு அர்த்த ராத்திரியில பேய் முழிச்சுகிட்டு இருக்கிற நேரத்துல, ஒரு மிஸ்டுகால் கொடுத்துட்டு, மறுநாள் காலையில உனக்கு என் நியாபகமே இல்லைன்னே சண்டை போட வேண்டியது. இந்த விஷயத்துல சத்தியமா உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது.
11. நீங்க யூஸ் பண்ணி தூக்கி போட்ட பொருளை எல்லாம் நாங்க சேர்த்து வெச்சிருக்கணும்னு எதிர்பார்க்குறீங்களே, நாங்க என்ன நீங்க தூக்கி போடுறதை எல்லாம் சேர்த்து வெக்கிற குப்பை தொட்டியா?
நண்பர்களே இந்தக் கேள்விகளை எல்லாம் படிக்கிறதோட நிறுத்திக்குங்க. தப்பித்தவறி கூட இந்தக் கேள்விகளை நீங்க உங்க காதலிகிட்ட கேட்டீங்கன்னு வெச்சுக்குங்களேன்........அவ்வளவுதான் ஜோலி முடிஞ்சுது.
Thursday, June 17, 2010
கிளிக் செய்யாமலேயே தேடுவதற்கு ஒரு தேடியந்திரம்

அட போங்கய்யா கூகுலைவிட சிறந்த தேடியந்திரமா? எத்தனை முறை இதே வர்ணனையை கேட்டு ஏமாந்திருக்கிறோம் என அலுத்து கொள்பவர்கள் கவனிக்க உண்மையிலேயே சூப்பர் தேடியந்திரம் இது என்பதை உறுதியாக சொல்லலாம்.
டக்டக்கோ என்னும் விநோதமான பெயர் கொண்ட அந்த புதிய தேடியந்திரம் உண்மையிலேயே கூகுலுக்கு மாற்றாக விளங்க கூடிய ஆற்றலை பெற்றிருக்கிறது.
இணைய உலகில் சற்றேரக்குறைய இரண்டாயிரத்துக்கும் அதிகமான தேடியந்திரங்கள் உள்ளன. இவற்றில் பல அறிமுகமாகும் போது கூகுலுக்கு மாற்று என வர்ணித்துக்கொள்வது வழக்கம் தான். ஒரு சில தேடியந்திரங்களை அடுத்த கூகுல் என்று பத்திரிகைகள் வர்ணிப்பதும் வழக்கம். ஆனால் இதுவரை எந்த தேடியந்திரத்தாலும் கூகுலை ஒரங்கட்ட முடியவில்லை.
முன்னால் கூகுலர்களால் ஆரம்பிக்கப்பட்ட குயில்(cuil) தேடியந்திரம் கூட இப்படி தான் கூகுலுக்கான சவால் என்று அழைக்கப்பட்டு ஏக பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு என்ன ஆனது என்றே தெரியாமல் போய் இப்போது விக்கிபீடியா பாணியில் களஞ்சிய தேடியந்திரமாக தன்னை உருமாற்றி கொண்டுள்ளது.
தேடியந்திர வரலாற்றை அறிந்தவர்கள் புதிய தேடியந்திரங்கள் வரும் போகும் ஆனால் கூகுல் எல்லோராலும் நாடப்படும் தேடியந்திரமாக தொடரும் என்பதை அறிந்தேயிருப்பார்கள். அதிலும் சாமன்ய இணையவாசிகளை பொருத்தவரை தேடல் என்றால் கூகுல் தான்.
கூகுல் அதன் வேலையை ஒழுங்காக செய்கிறது என்பதும் அதனை மிஞ்சக்கூடிய தொழில்நுட்பம் இன்னும் சாத்தியமாகவில்லை என்னும் நிலையில் இன்னுமொரு தேடியந்திரமாக உதயமாகியுள்ள டக்டக்கோ மாறுபட்ட தேடியந்திரம் என்னும் உணர்வை முதல் பார்வையிலேயே தந்து வியக்க வைக்கிறது.
கூகுலைப் போலவே இன்னொரு தேடியந்திரம் என்று தன்னை பற்றி அடக்கமாகவே கூறிக்கொள்ளும் டக்டக்கோ கூகுலுக்கு பதிலாக ஏன் தன்னை முயன்று பார்ப்பதற்கு என்று நெத்தியடியாக சில காரணங்களை பட்டியலிடுகிறது.
கூகுலை விட சிக்கல் இல்லாத தேடல் பக்கம், விளம்பர இடையூறு இல்லாத தேடல் முடிவுகள், சிறப்பான குறுக்கு வழிகள் என நீளும் அந்த பட்டியலில் உண்மையிலேயே நெத்தியடியான அமசம் பூஜ்ய கிளிக் வசதியாகும். ஜீரோ கிளிக் என குறிப்பிடப்படும் இந்த வசதியை கிளிக் செய்யாமலேயே தேடுவது என புரிந்து கொள்ளலாம்.
அதெப்படி கிளிக் செய்யாமலேயே தேடுவது சாத்தியம்?வழக்கமாக தேடும் போது என்ன செய்வோம். கீவேர்டை டைப் செய்துவிட்டு தேடு என கட்டளையிடுவது போல என்டர் தட்டுவோம் அல்லவா? அதன் பிறகு தேடல் முடிவுகள் வந்து நிற்கும் அல்லவா? அதில் ஏதாவது ஒன்றை கிளீக் செய்தால் தான் தேவிஅயான் தகவல்களை பெற முடியும். ஆனால் டக்டக்கோ தேடியந்திரமோ கிளிக் செய்ததுமே தேடப்படும் பதம் தொடர்பான அறிமுக குறிப்புகளாக சில தகவல்கலை அளிக்கிறது.
இந்த குறிப்புகள் மிகச்சரியாக தேடப்படும் பொருள் குறித்த சரியான அறிமுகமாக அமைந்து விடுகிறது. உதாரனத்திற்கு பிரெஞ்சு ஒபன் என் தேடினால் பாரிசில் மே மாதம் துவங்கி நடைபெறும் டென்னிஸ் போட்டி என்ற அறிமுகம் கிடைக்கிறது. பல நேரஙக்ளில் தேடப்படும் பொருளை புரிந்து கொள்ள இந்த அறிமுகம் உதவலாம். சில நேரங்களில் இந்த அறிமுகமே கூட போதுமாக இருக்கலாம். புதிய பொருள் குறித்து மிக அவசரமாக தேடும் போது அறிமுக குறிப்புகள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
விக்கிபீடியா போன்ற தளங்களில் இருந்து எடுக்கப்பட்டாலும் கூட இந்த அறிமுகம் பயனுள்ளதாகவே இருக்கிறது. விரிவான தேடல் தேவை என்றால் பக்கவாட்டில் உள்ள வசதியை துணைக்கு அழைத்து யூடியூப் உடபட பல இடங்களில் தேட முடியும்.
இந்த தேடியந்திரத்தில் கூகுல் என டைப் செய்து பார்த்தால் கூகுல் என்றால் பல அந்ததம் உண்டு உங்களுக்கு எது வேண்டும் என்று கேட்கப்படு அதன் கீழேயே கூகுல் என்றால் தேடியந்திரம் என்ற அறிமுகமும் இடம் பெறுகிறது. பலவித அர்த்தங்களில் ஒன்றாக கூகுல் என முடியும் பெயர் கொண்டவர்களும் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
இந்த அமசத்திற்காக நிச்சயம் இதனை பயன்படுத்தி பார்க்கலாம். இதனை தவிர தேடல் பக்கம் கூகுலைவிட தெளிவானதாக சிக்கலில்லாமல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதே போல தேடல் வரலாற்றை சேமித்து வைப்பதில்லை என்றும் குறிப்டப்பட்டூள்ளது.
இந்த அம்சங்கள் எல்லாவற்றையும் கூகுலோடு ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
Wednesday, June 9, 2010
பாதுகாப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி?

இதாவது பரவாயில்லை; உங்கள் வங்கி அக்கவுண்ட்டிற்கான பாஸ்வேர்டை அறிந்து கொண்டால் உங்கள் பணமெல்லாம் மாயமாய்ப் போய்விடுமே. இதற்கு என்ன செய்யலாம்? பாதுகாப்பான பாஸ்வேர்டை அமைக்க வேண்டும்; அதனையும் அதி பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும். ஒரு சிலர் எத்தனை பாஸ்வேர்ட்களை மனதில் நினைவில் வைத்துக் கொள்வது என்று ஒரே பாஸ்வேர்டை அமைத்திருப்பார்கள். இது அதைக் காட்டிலும் மோசமானது. ஒன்றை அறிந்து கொண்டால் உங்களின் அத்தனை ரகசிய இடங்களும் அலிபாபா கண்ட குகையாகிவிடும். எனவே பாதுகாப்பான பாஸ்வேர்ட் அமைப்பது எப்படி என்றும் அதனை எப்படி பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி என்றும் இங்கு காணலாம்.
1. பாதுகாப்பான பாஸ்வேர்ட் என்பது எழுத்துக்களும் எண்களும் இணைந்த கோவையாக இருக்க வேண்டும். சொற்கள் அல்லது எண்கள் மட்டும் என்றால் ஒரு சிலரால் எளி-தாகக் கண்டுபிடிக்க முடியும். இரண்டும் கலந்தது என்றால் நிச்சயம் கண்டுபிடிக்க முடியாது. இதனால் தான் சில வங்கிகள் மற்றும் இணைய தளங்கள் பாஸ்வேர்டில் கட்டாயம் எழுத்துக்களும் எண்களும் இருக்க வேண்டும் என கண்டிஷன் போடுகின்றன.
2. ஒரு பாஸ்வேர்ட் குறைந்தது 8 கேரக்டர்களும் அதிக பட்ச அளவில் 12ம் கொண்டு அமைக்கப்பட வேண்டும். இதில் அமையும் எழுத்துக்களில் கேப்பிடல் மற்றும் சிறிய எழுத்துக்கள் இருக்கலாம். குறைந்தது ஏதேனும் ஒரு ஸ்பெஷல் கேரக்டர் இருக்கலாம் (*-%$#@). உங்களுடைய பெயர், பிறந்த நாள், திருமண நாள் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டதாக இருக்கக் கூடாது. எனவே எடுத்துக்காட்டாக s64&lq67 என இருக்கலாம். இதில் 9 கேரக்டர்கள் உள்ளன. பெரிய மற்றும் சிறிய எழுத்துக்கள், எண்கள் மற்றும் ஸ்பெஷல் கேரக்டர்கள் உள்ளன. முதலில் இதனை நினைவில் வைத்துக் கொள்வது கடினமாக இருக்கும். ஆனால் போகப்போகச் சரியாகிவிடும். இதற்குப் பதிலாக brilliant போன்ற சொற்களை பாஸ்வேர்டாக வைத்துக் கொண்டால் எளிதாக யாரும் கண்டுபிடித்து விடுவார்கள்.
3. இன்னொரு கெட்ட பழக்கம் நம்மிடையே உண்டு. அது பாஸ்வேர்ட்களை எழுதி வைப்பது. எத்தனை நாட்களுக்கு எழுதி வைத்துள்ள ஏட்டினை பாதுகாப்பாக வைக்க முடியும். நீங்கள் இல்லாத போது இதனை யாரும் பார்த்துவிட்டால் எளிதாக மற்றவர்கள் பயன்படுத்தி விடுவார்களே! எனவே கூடுமானவரை எதிலும் எழுதிவைக்காமல் மனதிற்குள் வைத்துக் கொள்ளலாம்.
4. ஒரு சிலர் ஆண்டாண்டு காலமாய் பாஸ்வேர்டினைத் தங்கள் சொந்தப் பெயர் போல மாற்றாமல் வைத்திருப்பார்கள். இதுவும் தவறாகும். அடிக்கடி பாஸ்வேர்டினை மாற்ற வேண்டும். ஏனென்றால் பல இணைய தளங்கள் அனுப்பும் மால்வேர் போன்ற புரோகிராம்கள் இந்த பாஸ்வேர்டினை அறியும் வகையில் உருவாக்கப்படுகின்றன. அவையும் பாஸ்வேர்டினை அறிந்து அந்த புரோகிராமினை அனுப்பியவர்களுக்கு அனுப்பி வைக்கின்றன. இது போன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க பாஸ்வேர்டுகளை அடிக்கடி மாற்றுவது நல்லது.
Saturday, June 5, 2010
கணினித் துறையில் உள்ள அனைத்து வகையான புத்தகத்தையும் இலவசமாக தரவிரக்கலாம்.

Tuesday, May 25, 2010
ஆன்லைன் வங்கிக் கணக்கா? உஷார்!


இவை எல்லாம் சோதனை செய்த பின்னரே லாக் இன் செய்திடவும். பல தளங்களில் இதற்கென விர்ச்சுவல் கீ போர்ட் தரப்பட்டிருக்கும். இதனைப் பயன்படுத்துவது சற்று கூடுதல் நேரம் எடுக்கும் என்றாலும், நல்லதும் பாதுகாப்பானதும் ஆகும். ஏனென்றால் ஒவ்வொரு முறை இதனைத் திறக்கும் போதும் விர்ச்சுவல் கீ போர்டில் கீகள் இடம் மாறி இருக்கும். எனவே நாம் கிளிக் செய்திடும் இடத்தை வைத்து நம் பெர்சனல் தகவல்களைப் பெற முடியாது. சில வேளைகளில் தொலைபேசி வழியாகவும், வங்கிகளில் இருந்து பேசுவது போல பேசி நம் அக்கவுண்ட் பற்றிய பெர்சனல் தகவல்களைப் பெற முயற்சிப்பார்கள். அது போல எந்த வங்கியும் தகவல்களைப் பெறமாட்டார்கள். எனவே அவற்றைத் தவிர்த்துவிடவும்.
Tuesday, May 4, 2010
"மவுஸ்" மாயாஜாலம்



பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பரா பிரவுசர்களைப் பயன்படுத்துகையில் இணையப் பக்கங்களில் உள்ள ஹைப்பர் லிங்க்குகளின் மீது மவுஸ் கர்சரைக் கொண்டு கிளிக் செய்தால் லிங்க்குடன் சம்பந்தப்பட்ட தளம் புதிய டேப்பில் திறக்கப்படும். அதே போல ஒரு டேப் மீது மவுஸ் வீல் கொண்டு கிளிக் செய்தால் அந்த டேப் மூடப்படுவதுடன் அது நம் பார்வையிலிருந்து அகற்றப்படும். டேப் ஓரமாக உள்ள சிறிய பெருக்கல் அடையாளத்தின் மீத்து கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்வதைக் காட்டிலும் இது எளிதல்லவா!
மவுஸ் வீலைப் பயன்படுத்தி இணைய தளப் பக்கங்களில் முன்னும் பின்னும் செல்ல முடியும். பயர்பாக்ஸ் பிரவுசரில் நிறைய டேப்கள் திறந்திருக்கையில் டேப் பாரின் இரு முனைகளிலும் ஒரு அம்புக் குறி அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இதில் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்தால் மறைந்திருக்கும் பிற டேப்களைக் காணலாம். இதைக் காட்டிலும் ஓர் எளிய வழி உள்ளது. டேப் பாரில் எங்கு வேண்டுமென்றாலும் உங்கள் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று வைத்து உங்கள் மவுஸ் வீலை மேலும் கீழுமாக நகர்த்தவும். மறைந்துள்ள டேப்கள் காட்டப்படும்.
உங்கள் மவுஸ் பாய்ண்டர் ஸ்கிரீனில் எங்கிருக்கிறது என்று கண்டு பிடிப்பது கஷ்டமாக இருக்கிறதா? மவுஸ் பாய்ண்டர் ஸ்கீமைத் திறந்து பாய்ண்டரைப் பெரிதாகவோ அல்லது வேறு வடிவிலோ மாற்றிக் கொள்ளலாம். இதற்கு Start /Settings/Control Panel /Mouse எனச் செல்லவும்.
கிளிக் லாக் என்றொரு அருமையான வசதியை விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் எம்.இ. ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் காணலாம். இதன் விசேஷம் என்ன? பொதுவாக டெக்ஸ்ட் ஒன்றை செலக்ட் செய்திட அதன் தொடக்க இடத்தில் கர்சரை அழுத்திப் பிடித்துக் கொண்டு பின் அழுத்தியவாறே அப்படியே தேர்ந் தெடுக்கபட வேண்டிய இடம் வரை இழுத்து வந்து முடியும் இடத்தில் விட்டுவிடுவோம். டெக்ஸ்ட் செலக்ட் ஆகிவிடும்.
கிளிக் லாக் வசதியை இயக்கிவிட்டால் இது போல அழுத்திப் பிடித்துக் கொண்டே இழுக்கும் வேலை இல்லை. டெக்ஸ்ட்டின் தொடக்கத்தில் ஒரு கிளிக்; முடிவில் ஒரு கிளிக். காரியம் முடிந்தது. டெக்ஸ்ட் செலக்ட் ஆகிவிட்டது. இந்த இரண்டிற்கும் இடையே உள்ள நேரத்தையும் நீங்கள் கிளிக் லாக் மூலம் செட் செய்திடலாம்.
இதை எங்கிருந்து பெறுவது? என்று தேட வேண்டாம். உங்கள் சிஸ்டத்திலேயே உள்ளது. Settings/Control Panel/Mouse செல்லவும். பின் Button டேப் கிளிக் செய்திடவும். கீழாக உள்ள "Turn on Click Lock" என்ற பாக்ஸில் டிக் செய்திடவும். மீண்டும் கிளிக் செய்து அழுத்தியவாறே பழையபடி வேண்டும் என்றால் Settings பட்டன் அழுத்தவும்.
அடோப் போட்டோ ஷாப் அப்ளிகேஷன் புரோகிராமில் ஒன்றை ஸூம் செய்திட என்ன செய்கிறீர்கள்? டூல் பாரிலிருந்து ஸூம் டூலைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகிறீர்கள். அல்லது கண்ட்ரோல் + ஸ்பேஸ் பார் ஸூம் செய்திட உங்களுக்குக் கை கொடுக்கிறது. ஆல்ட் + ஸ்பேஸ் பார் அழுத்தினால் ஸூம் குறைகிறது. இவற்றை எல்லாம் மறந்திடுங்க! படத்தின் மீது கர்சரைக் கொண்டு சென்று ஆல்ட் கீ அழுத்திக் கொண்டு ஜஸ்ட் ஸ்குரோல் வீலைப் பயன்படுத்துங்க.
வெப் பிரவுசிங் செய்திடுகையில் பயர்பாக்ஸ் பிரவுசரில் தேவையற்ற டேப் ஒன்று திறக்கப்படுகிறதா? அதன் உள்ளே என்ன உள்ளது என்று பார்க்கக் கூட உங்களுக்கு விருப்பம் இல்லையா? தேவையற்ற டேப் மீது உங்கள் மவுஸ் கர்சரைக் கொண்டு செல்லவும். இப்போது மவுஸின் ஸ்குரோல் வீலைப் பயன்படுத்தி ஒரு கிளிக் செய்திடுங்கள். டேப் அதனுடன் இணைந்த தளம் எல்லாம் காணாமலே போயிருக்கும்.
இணையதளத்தில் உள்ள டெக்ஸ்ட்டை ஒவ்வொரு வரியாகப் பொறுமையாகப் படிப்பவரா நீங்கள்! உங்களுக்கு உதவ மவுஸ் தயாராக உள்ளது. ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு மவுஸ் ஸ்குரோல் வீலை நகர்த்துங்கள். ஒவ்வொரு வரியாகத் தள்ளப்படும். பயர்பாக்ஸில் பல புக்மார்க்குகளை ஏற்படுத்தி விட்டீர்கள். உங்கள் புக் மார்க்குகள் எல்லாம் நான்கு அல்லது ஐந்து வகைப் பட்ட பொருள் குறித்தவையாக உள்ளன. எடுத்துக் காட்டாக கம்ப்யூட்டர் டிப்ஸ் குறித்த தளங்களுக்கான புக்மார்க்குகள், ஆன் லைனில் பத்திரிக்கைகளைப் படிப்பதற்காக சில புக்மார்க்குகள், ஹார்ட் அட்டாக் வராமல் இருப்பதற்கான தளங்களுக்கானவை எனப் பல உள்ளன.
இவற்றை ஒவ்வொரு வகைக்கான போல்டர்களை உருவாக்கி அந்த போல்டர்களுக்குள் இவற்றை வகைப்படுத்தி போட்டு வைத்தால் புக் மார்க்குகளின் நீண்ட பட்டியலில் ஒவ்வொன்றாகத் தேடித் தேடி திறக்க வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட போல்டர்களைத் திறந்து தேவையான புக் மார்க்குகளின் மீது கிளிக் செய்து திறந்து படிக்கலாம். சரி, போல்டர் ஒன்றில் ஒன்றுக்கொன்று சார்ந்த தளங்களின் பெயர்கள் தானே இருக்கப் போகின்றன. எப்படியும் அனைத்தையும் பார்க்க வேண்டும்.
மொத்தமாக இவற்றைத் திறக்க முடியுமா? முடியும் என்கிறது பயர்பாக்ஸ். சம்பந்தப்பட்ட போல்டர் மீது மவுஸ் ஸ்குரோல் வீல் கொண்டு கிளிக் செய்தால் அந்த போல்டரில் உள்ள அனைத்து புக்மார்க்குகளுக்கான அனைத்து இணைய தளங்களும் திறக்கப்படும்.
Tuesday, April 6, 2010
வரவேற்கும் அபாயங்கள்

Monday, April 5, 2010
மெமரி காலியாகிறதா?

1. சிஸ் ட்ரே மீட்டர் (SysTray Meter): இதனை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை. இது ஒரு சிறிய டூல். இதனை இயக்கினால், இந்த டூல் சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்து கொண்டு, நம் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் மெமரியின் அளவைக் கண்காணித்துக் கொண்டு இருக்கும். அத்துடன் சி.பி.யு.வின் பயன்பாட்டி னையும் பார்த்து நமக்குக் காட்டிக் கொண்டு இருக்கும். வண்ணங்களில் காட்டுவதால் மெமரி பயன்பாட்டினைத் தெளிவாக அறிய முடியும். இந்த டூல் பெற http://88.191.26.34/computers_are_ fun/index. php/systraymeter/ என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும். இந்த டூல் பைல் அளவு 15 கேபி.
2. மெம் இன்போ (Mem Info): இந்த புரோகிராமினை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இன்ஸ்டால் செய்த பின்னர், இது கம்ப்யூட்டரின் மெமரி பயன்பாட்டினைத் தொடர்ந்து அளந்து கொண்டிருக்கும். மிக அதிகமாக, நெருக்கடியான நிலையை மெமரி பயன்பாடு அடையப் போகிறது என்றால், உடனே எச்சரிக்கையினை வழங்கும். சிஸ்டம் ட்ரேயில் இது அமர்ந்து கொள்ளும். மெமரி டிபிராக் செய்திடவும் இதனைப் பயன்படுத்தலாம். முதலில் சொல்லப்பட்ட சிஸ் ட்ரே மீட்டர் போல இது செயல்பட்டாலும், சில கூடுதல் வசதிகளையும் இந்த டூல் கொண்டுள்ளது. வண்ணம் பூசி முடிவுகளைக் காட்டும். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி: http://www.carthagosoft.net/meminfo.htm
3. பெர்பார்மன்ஸ் மானிட்டர் (Performance Monitor): இந்த டூல் மெமரி பயன்பாட்டினைக் கண்டறிவதுடன், டிஸ்க் மற்றும் நெட்வொர்க் பயன்பாட்டினையும் கண்காணிக்கிறது. உங்கள் திரையின் மேலாக ராம், டிஸ்க் மற்றும் நெட்வொர்க் பயன்பாட்டிற்கான கிராப் ஒன்றைக் காட்டிக் கொண்டே இருக்கும். இதனைப் பெற http://www.hexagora.com/en_dw_davperf.asp என்ற முகவரிக்குச் செல்லவும். தற்போது இதன் பதிப்பு 3.9 பல வசதிகளுடன் இலவசமாகவே கிடைக்கிறது.
4. ப்ரீ ராம் எக்ஸ்பி ப்ரோ (FreeRAM XP Pro): இது சற்று கூடுதலான திறன் கொண்ட புரோகிராம். மெமரி மானிட்டருக்கும் மேலாகப் பல வேலைகளை மேற்கொள்ளக் கூடியது. ராம் மெமரியின் வேகத்தைக் கண்காணித்து அதனைத் திறம்பட நிர்வகிக்கும் திறன் கொண்டது – இது மெமரியைத் தானாகவே விடுவிக்கும், அளவெடுக்கும், நமக்கு ரிப்போர்ட் தரும், மெமரி கம்ப்ரஸ் செய்து காட்டும். இதனைப் பெற http://www.yourwaresolutions.com/software. html#framxpro என்ற முகவரி செல்லவும். ஸிப் பைலாக 606 கேபி அளவில் இந்த பைல் கிடைக்கும். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7ல் இது செயல்படுமா எனத் தெரியவில்லை.
Thursday, April 1, 2010
தேவையற்ற வலைப்பக்கங்களை Block செய்ய
உதாரணமாக வீட்டில் சிறுவர்கள் / மாணவர்கள் எந்நேரமும் ஆர்குட், யூடியுப் ஃ பேஸ்புக் என படிப்பில் கவனம் செலுத்தாமல் மூழ்கி கிடப்பது. இது போன்ற தளங்கள் மற்றும் வலைப்பக்கங்களை நமது கணினியில் Block செய்ய வேண்டுமெனில், அதற்கான மென்பொருட்கள் (காசு கொடுத்து வாங்கோணும்) சந்தையில் நிறைய உள்ளன. ஆனால் எந்த ஒரு மென்பொருளையும் உபயோகிக்காமல் இது போன்ற தளங்களை விண்டோஸ் XP யில் Block செய்வது எப்படி என பார்க்கலாம்.
My Computer ல் விண்டோஸ் XP இயங்குதளம் உள்ள ட்ரைவிற்கு சென்று அங்கு \Windows\System32\Drivers\etc என்ற கோப்புறைக்குள் சென்று அங்குள்ள hosts என்ற கோப்பை Notepad ல் திறந்து கொள்ளுங்கள்.

அந்த கோப்பின் கடைசி வரிக்கு சென்று அங்குள்ள 127.0.0.1 localhost என்ற வரிக்கு அடுத்த வரியில் 127.0.0.2 http://www.youtube.com/ எனவும், மற்றொரு தளத்தை Block செய்ய 127.0.0.3 http://www.sitename.com/ (உங்களுக்கு வேண்டியபடி) டைப் செய்து host கோப்பை சேமித்து. மூடி விடவும்.
